மெழுகுச் சிறகுகள் 13 அப்போதில் அவர்களுக்குப் பின்னால் ஏதோ ஆட்கள்வரும் இரைச்சல்கள். ஆர வாரம் ! குப்பத்தை மாந்தோப்பைத் தாண்டி விட்டால், கூப்பிடுகிற தொலைவில்தான் தீவின் எல்லை இப்படியோ, அப்படியோ திரும்பு வதற்குள் ஏழெட்டுக் குதிரைகளில் காவலர்கள் "அப்படியே நில்கிழமே ஒரங்கு லமும் அசையாதே' என்றுருமிச் சூழ்ந்து கொண்டார். சற்றேனும் இதைஎதிர்பார்க் காத கிழவி 'சனியன்களா இது என்ன புதுக்கு ழப்பம்? புற்றுகளைப் பாம்புகட்கு விட்டு விட்டே போகின் றோம் கரையானாய்! இன்னும் என்ன? வற்றல்களாய் சுள்ளிகளாய் நடைப்பிணங்களாய் வாயிருந்தும் ஊமைகளாய் செல்கின்றோமே ! சுற்றிச்சுற்றி எமைவிரட்டி அலைக்கழிக் காதீர் தொலையுங்கள் அப்பாலே. எனகர் ஜித்தாள்! பூங்கண்ணி இவ்வாறு கத்தக் கேட்டுப் பொரிதின்று கொண்டிருந்த மற்றோர் கிழவி 'போங்களடா முடிச்சவிழ்க்கும் யுக்தி யாஇது? பொழைப்புக்கு வேறிடத்தைப் பாருங்க" ளென்றாள். தாங்காத மதாங்கன்தான் வெகுண்டு சீறித் தன்குதிரை விட்டிறங்கி ஓடி வந்தான்! ஆங்காரமாய் பூங்கண்ணி தன்னை ஓங்கி அடிக்காலால் உதைத்துதைத்தே உருட்டி விட்டான்!
பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/25
Appearance