உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மெழுகுச் சிறகுகள் 25 பண்டிகை நாட்க ளைப்போல் பாபரின் ஆட்கள் எல்லாம் - கொண்டாட்டம் போட்டுக் குடிபோதை ஏற ஏறச் சண்டையை மறந்தே போனார்; சந்தையில் கறிகள் விற்கும் பெண்டுகள் போலத் தம்முள் பெரும்பூசல் போட்டுக் கொண்டார்! ஐம்பொறிகள் மரத்துப் போக; ஐம்புலன்களும் ஒய்ந்துபோக, கைகொண்ட காசிம் கான்தான் கண்ணிரோ டேதடுத் ததையும் மைகொண்ட வானம் போல மனமதை இருட்டாய் ஆக்கிய பொய்மதுகிறக் கத்தால் பாபர் பொருட்படுத்தவே இல்லை, ஐயோ! சாகஸி பானம் செய்த சதியினால் பாப ருக்குத் தேகமே விஷமாய் ஆச்சு- தெரிவதெல்லாம் ரானா சங்கன் ஏகஉரு வொன்றே ஆக, இடம், காலம் எல்லாம் - மறந்தான்! நாகுழறி ரகசி யத்தை நழுவவே விட்டு விட்டான்!