உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

வ.கோ. சண்முகம்

2 வ.கோ. சணி முகம் விண்ணுயர வெண்புறாக்கள் பறந்த நாடு ! வேங்கைகளைப் படைக்குலமாய்க் கொண்ட நாடு எண்ணுயரும் எழுத்துயரும் வளத்தை எல்லாம் இனிக்கின்றக் குயில்வாய்கள் கூவும் நாடு ! "தண் ணென்ற அறம் வளர்த்தும் அதனைக்காக்கத் தணல் போன்றே வீரத்தைத் துணையாய் வளர்த்தும் கண்மணிபோல் தன்னுரிமை போற்றி வந்தக் கவின் இதய புரி மேலே பகையின் பாய்ச்சல்! உள்ளுக்குள் உள்ளிருந்தே உளவு சொல்லி, உரிமைகளைக் கருவாடாய் விற்கத் துணிந்த கள்ளமனப் பொய்வஞ்சர், சூதுக் காரர், கவ்வ வந்தோர் கால்துக்கி முத்த மிட்டார் ! பள்ளத்தில் சுதந்திரத்தை உருட்டி விருட்டார் ! பட்டாளம் சிதறிற்று மனித ரத்தம் வெள்ளமெனப் பெருக் கெடுத்தே ஒட லாச்சு ! வெறிக்கழுதை அரியணையில் அமர லாச்சு ! இகல்வெல்ல முடியாமல் வீழ்ந்த அந்த இதயபுரத் தலைநகரின் குட்டி வீதி ! பகல் முளைக்கத் தொடங்குகின்ற அரும்பு வேளை ! படுத்திருந்த கிழப்பாயைச் சுருட்டி வைத்துப் புகையிலையின் தூள் சேர்த்து புளவு' போட்டுப் பூங்கண்ணி ஆத்தாள்தான் வெளியே வந்தாள் ! நகல் எடுத்துக் கணிப்பதுபோல் உற்றுஉற்று நகரத்தின் கொடுமைகளைப் பார்த்தாள் ; கொதித்தாள் !