பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப் பூவே மெல்லப்பாடு | 107 ஆடிக் களிப்பில் புரளுங்கள்! அந்திச் சூரியன் மறைந்தாச்சு! அழகு நிலவும் வந்தாச்சு! பந்தி பந்தியாய் பிள்ளைகளே, பறவைச் சிட்டாய் வாருங்கள்! பாட்டி கதையைக் கேட்கவா? பானைச் சோற்றைத் தின்னவா? நீட்டி முழக்கிப் பாடவா? நினைத்ததை எல்லாம் பேசவா? இல்லை இல்லை கட்டாயம்! என்ன வைப்போம் பந்தயம்? எல்லை இல்லாக் களியாட்டம்! இன்றைக் கோர்புது விளையாட்டு! அப்பன், பாட்டன் வளர்த்த கலை! ஆண்மை திண்மை அளித்தகலை! கப்பல் ஏறி வந்ததில்லை! கன்னித் தமிழர் சொந்தக்கலை!