பக்கம்:ராஜாம்பாள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இராஜாம்பாள்

வழக்குகளில் நீர் ருஜுப்படுத்தி இருப்பதால்தானே நீர் மகா கெட்டிக்கார ரென்றும் உமக்குச் சமானமாய் யாரையுஞ் சொல்லக்கூடாதென்றுஞ் சொல்லுகிரு.ர்கள்.

கோவிந்தன்: போலீசார் அவ்விஷயங்களில் தப்பாய் நடந்திருந்ததாக எனக்குத் தோன்றினதால் உண்மையைக் கண்டுபிடித்தேன். அதற்காகத் தாங்கள் என்பேரில் தப்புக் கண்டுபிடிக்கலாமோ? தயவுசெய்து தாங்கள் கண்டுபிடித்திருக்கும் சாட்சியங்களே எனக்குத் தெரிவித் தால் நான் சென்னைக்குப் புறப்பட்டுப் போகிறேன். - மணவாள நாயுடு; நாங்கள் கஷ்டப்பட்டுக் கண்டு பிடித்திருக்கும் விஷயங்களைச் சொன்னல் அதிலிருந்து குட்ரயுக்தி எடுத்து மாற்றுவது உமது வழக்கமாயிற்றே! நான் இப்போது சொல்லாவிட்டால் எனக்குப் பயந்து கொண்டு மணவாள நாயுடு சொல்லமாட்டேனென்று சொன்னனென்றும், சொல்லியிருந்தால் வானத்தை வில்லாய் வளைத்து விடுவேனென்றும், மணலைக் கயிருய்த் திரித்துவிடுவேனென்றும், எல்லாரிடமுஞ் சொல்லித் தற்புகழ்ச்சி செய்துகொள்வீர். மேலும் உமக்கு நான் பயந்திருந்தால் அல்லவா உம்மிடத்திற் சொல்லாமல் ஒளிக்கப் போகிறேன்? ஒவ்வொன்றாய்ச் சொல்லுகிறேன்; கேளும்: - முதலாவது, கோபாலன் ராஜாம்பாளைப் பன்னிரண்டு மணிக்கு உலகளந்த பெருமாள் கோவில் தெரு, 25-வது நம்பர் வீட்டிற்கு வரச்சொல்லி எழுதியிருக்கிருன்.

இரண்டாவது, மேற்சொன்ன வீட்டில் நாங்கள் போய்ப் பார்த்தபோது, மோசம் போனேன்; கோபால: என்னைச் சுடலைமாடன் தெரு, 29-வது நம்பர் வீட்டி லுள்ள குதிலில்...’ என்று ராஜாம்பாள் கைப்பட எழுதிய காகிதம் அகப்பட்டது. கோபாலன் என்று எழுதி யதில் ன் சரியாய்த் தெரியாதபோதிலும், என்னைச் சுடலைமாடன் தெரு’ என்று எழுதியிருப்பதிலிருந்து, கோபாலன் அவளைக் கொண்டுபோகப் போகிருனென்பது பரிஷ்காரமாய் ஏற்படுகிறது.

மூன்றாவது, ராஜாம்பாளைக் குத்திக் கொன்ற கட்டாரி, கோபாலன் பக்கத்திற் கிடந்ததன்றி அவன் மேலெல்லாம் ரத்தம் சிந்தியிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/84&oldid=684626" இலிருந்து மீள்விக்கப்பட்டது