உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

1V

யான் எழுதிய பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, இரண்டாம் குலோத்துங்கன், பெரிய புராண ஆராய்ச்சி (Thesis for M. O. L.), oral gudu assirfræð (Thesis for Ph. D.) என்னும் ஆராய்ச்சி நூல்களும், இவற்றைத் தயாரித்தபொழுது எடுத்த வேறு பலவகைக் குறிப்புக் களும் மேற்சொல்லப்பெற்ற மூலங்களோடு இந்நூல் வரையத் துணையாக அமைந்தன.

ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக யான் தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புடைய சிற்றுார்களையும் பேரூர்களையும் நூற்றுக்கணக்கான கோவில்களையும் பார்த்து வருபவன்; தஞ்சையிலேயே ஆறு ஆண்டுகள் இருந்து படித்தவன்; தஞ்சை அரண்மனையின் பல பகுதிகளை நேரிற் கண்ட வன்; கிருஷ்ணுபுரம், மாமல்லபுரம், கங்கை கொண்ட சோழபுரம் முதலிய வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களை யெல்லாம் நேரிற் கண்டு குறிப்புக்கள் தயாரித்தவன். இவை அனைத்தின் உதவியைக் கொண்டு, என் சிற்றறி! வுக்கு எட்டிய வரையில், இச்சிறு நூலை வெளியிட்டேன்.

இது கல்லூரி மாணவர்க்கும் தமிழக ஆட்சியை அறிய ஆவலுறும் தமிழ் மக்களுக்கும் நன்கு பயன்படும். இதனை மேலும் நன்கு விரித்து எழுத விருப்பமுண்டு. திருவருள் துணை செய்யுமாயின், அடுத்த பதிப்பில் மேலும் பல செய்திகளேச் சேர் க் க வாய்ப்பு உண்டாகலாம். -

தியாகராசர் கல்லூரி, }

மதுரை. மா. இராசமாணிக்களுர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/5&oldid=573549" இலிருந்து மீள்விக்கப்பட்டது