கே. பி. நீலமணி
29
கே. பி. நீலமணி 29:
போது சோபியாவின் விழிகளிலிருந்து வழிந்தோடிய கண்ணtர், குருவினிடம் மன்னிப்பை இறைஞ்சுவது போலிருந்தது.
பாகவதர் ஒரு தந்தைக்கு மேலான பாசத்துடன் அவளது முதுகைத் தட்டி ஆறுதல் கூறினார்.
'நீ கூறாவிட்டாலும் பாபுவின் நடை, உடை பாவனைகளில் கண்ட மாறுதலுக்கு நீதான் காரணம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்திருந்தது சோபியா. குருடனுக்கு வேண்டியது பார்வை தானே யொழிய; அது யார் மூலமா கிடைச்சா எனன? இதுக்காக சந்தோஷப் படுவதைவிட்டு யாராவது வருத்தப் படுவாளா? சரி, கையிலே, அது என்ன பாக்கெட்?’’
'அமெரிக்காவில் பாபு செய்த கச்சேரிகள் சிலவற்றை டேவிட் டேப்' எடுத்து அனுப்பியிருக்கிறார். இதோ போடுகிறேன்' என்று சோபியா உள்ளே சென்றாள். கல்யாணி வியப்போடு அவளையே பார்த்துக் கொண்
டிருந்தாள்.
சற்றைக்கெல்லாம் டேப் ரிகார்டரிலிருந்து பிறந்த இசையைக் கேட்டு பாகவதர் ஒரேயடியாக உணர்ச்சி வசப்பட்டு பரவசமாகி போனார்.
அந்தக் குரலில் அதே இனிமை, அனாயாசமான
பிடிகள், ஸ்வரக்கோர்வைகள். இளமை முறுக்கேறிய தன்னுடைய வாலைப் பருவத்தில் கொடிகட்டிப் பறந்த போது தான்பாடிய பாட்டை; மீண்டும் தானே
இப்போது கேட்பது போலிருந்தது!
கல்யாணி அம்மாளுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை! உள்ளத்தினுள்ளே மகிழ்ச்சிப் பெருக் கெடுத்தோடிக் கொண்டிருந்தது. எதிரே நிற்கும்