உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வண்ணாரப்பேட்டை

4.1.37

நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

அருமையோடு தாங்கள் அனுப்பிய கடிதமும் புதுவருஷ வாழ்த்தும் வந்தன. ரொம்ப சந்தோஷம்.

ரவீந்திரர் எழுதிய கவி முக்கியமாக 1900 ஆவது வருஷத்தைக் குறித்ததாய் இருந்தாலும், தற்போது நிகழ்கிற 1938 ஆவது வருஷத்துக்கு ரொம்ப அமைப்போடு பொருந்துவதாய் இருக்கிறது. சோர்வடைந்து மனம் தத்தளித்துக் கொண்டிருக்கிற யாவருக்கும் எக்காலத்திலுமே கைதூக்கிவிடக்கூடிய அரியதொரு சமாதானமாக இருக்கிறது. அதை மேற்கோளாகக் கையாண்டது ரொம்பவும் நயமான காரியம்.

காகிதம், அச்சு முதலான அம்சங்கள் எல்லாம் ரொம்ப அலங்காரமாக அமைந்திருக்கின்றன. வருஷப் பிறப்பன்று அத்தகைய வாழ்த்து கைக்கு வருகிறது என்றால் எப்பேர்ப்பட்ட சகுனம்.

நான் அதை ரொம்பவும் அனுபவித்தேன். அப்படியே பல நண்பர்களும் அனுபவித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.