பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ரசிகமணி டிகேசி


29.41 மாலை ரேடியோ கேட்க முடியாமல் போய்விட்டது. நந்திக்கலம்பகத்தைப் பற்றிய கட்டுரை வானொலியில் வெளியாகும். அதைப் படித்துத்தான் திருப்தி அடைய வேண்டும் நான். ஸ்கிருப்டுக்கு நகல் இருந்தால் அனுப்பவேணும்.

நண்பர் ஆவுடையப்பப் பிள்ளையவர்களை மற்றும் நண்பர்களையும் கலந்து மீனம்பாக்கத்திலேயே இன்னும் கொஞ்ச காலம் தங்குவதாக உத்தேசித்திருக்கிறேன்.

29.6.41 இல் திருச்சிக்கு வருகிறேன் (ரேடியோ சம்பந்தமாக). அதை ஒட்டி திருநெல்வேலிக்கு நான் வருவேன். நண்பர்களை எல்லாம் பார்த்துக்கொள்ளவேணும். வி.பி.எஸ். அவர்களைச் சமீபத்தில் பார்த்தீர்களா. செளகரியமாக இருக்கிறார்களா.

கோகலே ஹாலில் வியாழன் தோறும் கம்பரமாயணம் வாசித்தேன். நூற்றைம்பது பேர் வருவார்கள். எல்லாரும் ரொம்ப ரொம்ப ரிசிக்கிறார்கள். முதியோரும் இளைஞரும் பெண்டிருமே வருகிறார்கள். இவ்வளவு பேரும் கம்பரில் ஈடுபட்ட பிறகு கம்பரை அழித்துவிட முடியாது எளிதில்.

வீட்டில் அம்மாள் குழந்தைகள் எல்லாரும் செளக்கியந்தானே. -

தங்கள் உதவி கொண்டு மாணவர் சங்கத்தில் நண்பர் வீரபத்திர பிள்ளையவர்கள் கம்பர் விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நண்பர்கள் கணேசனும் நீலாவதி அம்மையும் வந்தது ரொம்ப பாராட்டவேண்டிய விஷயம்.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்