உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

49
ஏரோ
மீனம்பாக்கம்
9.8.41

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

கோர்ட்டுகளில், முக்கியமாக ஹாலில் கோர்ட்டுகளில் பெரிய கேஸ் என்றிருந்தால் ஏதாவது சாக்கை வைத்துக்கொண்டு ஒற்றி ஒற்றி வைக்கிறது வழக்கம். அதுபோல நீண்ட கடிதம் எழுத வேண்டியிருந்தால் ஒற்றிப் போடுகிறது வழக்கமாய்ப் போய்விட்டது.

ஸ்ரீவைகுண்டத்தில் நல்ல சங்கம் ஏற்படக்கூடும் என்று நம்புகிறேன். நண்பர் திருவேங்கடத்தய்யங்கார் நல்ல ரசிகர். அவர்களும் மற்ற நண்பர்களுமாகச் சேர்ந்து சபை கூடவும் கம்பராமாயணத்தை அனுபவிக்கவும் வசதி ஏற்படலாம்.

தாங்கள் காலை 4 மணிக்கு எழுந்திருந்து ஆபிஸ் வேலையை எல்லாம் தீர்த்துவிட்டுப் பொழுதுபோகவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கத்தான் வேண்டும். திருநெல்வேலி என்றால் சிந்துபூந்துறை, வீரராகவபுரம், வண்ணார்பேட்டை, பாளையங் கோட்டை முதலான இடங்களுக்கு சவாரி செய்து தமிழையும் கலைகளையும் பற்றி நண்பர்களுடன் பேசி காலை நாலுமணி நேரத்தையும் கடத்தலாம். ஸ்ரீவைகுண்டத்தில் சவாரியெல்லாம் முன்கட்டுக்கும் பின் கட்டுக்குந்தானே.

ஆனாலும் ஒன்று ஸ்ரீவைகுண்டத்தில் சீதா கலியாணத்தை முடிப்பது எளிதுதான்.

நண்பர் ராமசுப்பிரமணியம் தங்கள் சீதாகல்யாணத்தைக் கொடுத்தார்கள். ஒருவகையாக முழுதும் பார்வையிட்டேன். வாசிப்பவர்களுக்கு ரசமாகவே இருக்கும். அச்சுக்குச் சீக்கிரமாக கொடுக்க வேண்டியிருந்ததால் சாவகாசமாகப் பார்க்க நேரமில்லை. மேலும் சாவகாசமாகப் பார்த்ததாலும்