உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

77


தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் 70 வது ஆண்டு விழாவில் எத்தனையோ பேர் கலந்துகொள்ள விரும்புவார்கள். ராஜாஜி கல்கி முதலியோர் கலந்து கொள்ளுவார்கள். ஆனால் அவர்களது வசதி எப்படி என்று தெரியவில்லை. தற்சமயம் அவர்களுக்கு வசதியும் இல்லைதான்.

நாகர்கோயிலில் திருவனந்தபுரத்தில் எத்தனையோ பிரமுகர்கள் தே.வி.யின் விழாவில் பங்கெடுத்துக்கொள்ள விரும்புவார்கள், சந்தேகம் இல்லை. ஆனால் அவர்களுடைய பேர் காணவில்லை. எப்படியும் நாம் கலந்துகொள்ள வேண்டியதுதானே.

எனக்கு உடம்பும் சரியாய் இல்லை. நாள் வசதியும் இல்லை. ராஜேஸ்வரியின் கடிதம் அழகிய இலக்கியம். இங்கு பலரும் ரொம்ப ரொம்ப அனுபவித்தார்கள். பண்டிதர்களிடம் சொன்னால் அதை ஒப்பவா செய்வார்கள். பாராட்டுரை என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் எந்த விஷயத்தில்தான் அவர்களைக் கவனித்துப் பேசினோம், ஒன்றிலும் இல்லை.

வருகிற வெள்ளிக்கிழமை முகாம் இங்கு உண்டல்லவா. 10.7.45 அன்று மறுபடியும் சென்னைக்குப் புறப்படுகிறேன்.

தங்கள்

டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖