பக்கம்:புது வெளிச்சம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'எது உயர்ந்ததற் கெல்லாம் உயர்ந்ததோ எது பெரியதற் கெல்லாம் பெரியதோ, எது ஒப்புவமை இல்லாததோ, எது வெளிப்படையாகத் தோன்றாத ஒன்றோ, அளவுக்கடங்காததோ, உலகெலாமாகியதோ, மிகப் பழமையானதோ, இருளுக்கப்பாற் பட்டதோ, இதனைக் காட்டிலும் வேறானதும் நுண்மை (சூக்குமம்) யானதும் பிறிதொன்றில்லையோ, அதுவே ரிதம், அதுவே சத்தியம்' என்று அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இதுவே தீர்க்க தரிசிகளின் பரப்பிரம்மம் 'அதுவே அக்கினி, அதுவே வாயு, அதுவே சூரியனும் சந்திரனும், - மற்றுள்ள அனைத்தும்', என்கிறது உபநிசத்து.

சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். இத்தகைய ஆற்றல்சால் ரிதத்தைப் பற்றி நாம் இதுகாறும் அவசியமிருந்தும் அறிந்து கொள்ளவே இல்லை. அறிந்தவர் எவரும் முன்வந்து நமக்கு அறிவிக்கவும் இல்லை. மற்ற மதக்கோட்பாடுடையவர்களைப் பற்றி நான் இங்கு எதுவும் கூறவரவில்லை. இந்து மதத்தினரைப் பற்றியே, - நானும் ஒரு இந்துவாக இருப்பதனாலேயே, இருள் மூடிய இந்தக் காலகட்டத்தில் கட்டாயமாக இதை நான் கூறித்திர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதனாலேயே முடிந்த அளவு விவரிக்க விரும்புகிறேன்.

திராவிட மக்களாகிய நம்மை, ஆரியர்கள் தம்முடைய மதத்தில் சேர்த்துக் கொண்டபின் நமக்கு மதம் சுட்டிக்காட்டும் உண்மைகளை கூறித் தெளிவித்திருக்க வேண்டுமல்லவா? இஸ்லாம் கூறித் தெளிவித்திருக்கிறது. கிருத்துவம் கூறித் தெளிவித்திருக்கிறது. எங்கள் மதநூல் திருக்குரான், எங்கள்மதநூல் பைபிள் என்று ஒளிவுமறைவின்றி அது சரியோ தப்போ - விளக்கி இன்றும் தெரிவித்துக் கொண்டுள்ளது கண்கூடு.

ஆனால், இந்துமத போதகர்கள் அன்றிலிருந்து இன்று காறும் இதைச் செய்யவில்லை, செய்வது மில்லை என்பது, நாம் அனைவரும் அறிந்ததே. இதற்குக் காரணம் என்ன? என வினாவின், விவேகானந்தர், சின்மயானந்தர், தயானந்த சரஸ்வதி, மற்ற மடாதிபதிகள் முதல் எவருக்கும் உபநிசத்துகளை எடுத்து விளக்கி மக்களைக் கடைத்தேற்றிவிடும் அதிகாரம் இல்லை, உபநிசத்து என்றால் இரகசியம், பன்னிரண்டாண்டுகள் குருகுலவாசம்

புது வெளிச்சம்

ᗍ 13