66
துவங்கின. "ப்ரோ மதியன்” தீக்குச்சி என்றொரு வகை வந்தது. ஊசி மருந்து அடைக்கப்பட் டுள்ளது போன்ற சிறிய கண்ணாடிக் குமிழிக்குள் 'சல்ப்யூரிக்' அமிலத்தை அடைத்து அக்குமிழின் மேல் பொட்டாசியம் குளோரேட், சர்க்கரை, பிசின் ஆகியவற்றைத் தடவி அதன்மீது ஒரு தாளும் ஒட்டப்பட்டிருக்கும்.
குமிழியை உடைத்ததும் தாளில் தீப்பற்றிக் கொள்ளும்.
1845-ம் ஆண்டில், 'அமார் பஸ் பாஸ்டரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பயனாகத்தான் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த "ஜே. இ. லண்ட் ஸ்ட்ராம்” என்பவரால், இன்றைய பாதுகாப்பான தீக்குச்சி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இரசாயனக் கலவையில் ஒரு பகுதிதான் தீக்குச்சியின் நுனியில் இருக்கும். தீப்பெட்டியின் பக்கவாட்டிலுள்ள இருபுறமும் அமார் பஸ் பாஸ் தடவப்பட்டிருக்கும். தீப்பெட்டியின் அந்தப் பகுதியில் குச்சியை உரசினால்தான் தீப்பிடிக்கும்; மற்றப்படி தீ தானாக உருவாகாது.
இந்தப் பாதுகாப்பான தீப்பெட்டியை ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த "ஜே. இ. லண்ட் ஸ்டார்ம்" என்பவர் 1855-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அன்றிலிருந்து இதுதான் இன்று வரை உலகெங்கும் உபயோகிக்கப்படுகிறது.