பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

இந்தக் குறுகிய கால்பகுதி நிலப் பரப்பையும் பசுமையாகவும், சுபிட்சம் நிறைந்ததாகவும் இருக்கச் செய்வதில்-பெரும்பகுதியான கடலுக்கு மகத்தான பங்கு உண்டு.

எப்படி என்றால்-

பரந்த கடல், மற்றும் ஆறு ஏரி போன்ற நீர் நிலைகளிலுள்ள நீரானது சூரிய வெப்பத்தால் ஆவியாக மேலே எழும்பி, வானத்திற்குச் சென்று மேகமாகப் பரவுகிறது. மிதந்து செல்லும் மேகங்கள் குளிர்ச்சியடையும் போது, அவை மீண்டும் மழையாகப் பொழிந்து பூமியிலும்,கடலிலும், ஆறு குளங்களிலும் கலக்கிறது.

இப்படிக் கலக்கிற நீர், சூரிய வெப்பத்தால் மீண்டும் ஆவியாக-மேகமாக-மாறி மழை நீராக மீண்டும் பூமிக்கே திரும்புகிறது. இப்படி இயற்கை தவறாமல் தன் கடமைகளை மாறி மாறிச்செய்து உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

எப்போதாவது இந்த இயற்கை தவறும் போது-மழை நீரின்றி பூமி பாளம்பாளமாக வெடிக்கிறது; நீரில்லாமையால் ஆறுகள் வறண்டு போகின்றன. நிலங்கள் காய்ந்து கருகுகின்றன. விளைச்சலில்லாமலும், நீரில்லாமலும். மக்களும் மற்ற உயிரினங்களும்-பசி, தாகத்தால் மாண்டு மடிகின்றனர். இதனையே பஞ்சம் என்கிறோம்.