உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

“விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போல்” என்றே செந்தமிழால்

தட்டி அடிமைத் தளையவிழ்க்கப் பாடியது
தொட்டுத் துயிலெழுப்பும் தூய புதிய நடை!

“எந்தையுந் தாயும் இருந்து குலாவியே
வந்ததும் இந்த வளத்தமிழ் நா(டு)” எனச்

சிந்தையில் நாட்டின் சிறப்பையும் பற்றையும்
தந்தது பாரதித் தாய்மைப் புதிய நடை!

கோவிந்தர் பாட்டின் குறிக்கோளைச் செந்தமிழால்
பாவேந்தர் பாரதியார் பாட்டிசைத்தார்! அப்பாடல்

கூனி நரைத்தோர், குழிவிழுந்த கண்ணோரை
ஏனற் புலிபோல் எழுந்திருக்கச் செய்ததுவே!

நாட்டின் விடுதலையைப் பாட்டின் குறிக்கோளாய்த்
தீட்டுங் கவிதைச் செழுஞ்சொற் புது நடையே!

“ஓடி விளையாடு பாப்பா!” எனக்குழந்தை
பாடி விளையாடப் பாட்டிசைத்தார்! நாடினால்

பாலூட்டிச் சீராட்டிப் பாயிற் கிடத்தியே
தாலாட்டுந் தாயின் தமிழ்க்கவிதை ஆகாதோ?

“பெண்ணும்நல் லாணும் நிகரென வாழ்ந்திடில்
மண்ணில் அறிவு மலர்ந்து செழிக்குமாம்!

மை தழைத்திடக் கூத்திடு வோமடா!
பெண்மையும் வெல்கென்று கூத்திடு வோமடா!”

என் றிசைத்த பாரதியின் ஏற்றமிகு பாடலெலாம்
மன் றிடையிற் பெண்கள் சரிசமமாய் வாழ

வகுத்த புதிய நடை மன்றல் நடையாம்
தொகுத்து நான் சொல்லுவதோ தூய புதிய நடை!

காட்டுக் குயிற்பாட்டுச், செங்கோவைக் காய்கோதும்
வீட்டுக் கிளிப்பாட்டு, விண்பூத்த பொன்னந்தி