உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

உமியென்றா நினைத்துவிட்டான்? நமது வீரர்
உதை தாங்க முடியாமல் ஓடு கின்றான்!
நமையீன்ற தாயகயே வெற்றி கொள்ளும்!
நாமெல்லாம் போர்ப்பரணி பாடு வோமே! 7

போரென்று கேட்டவுடன் தோள்கள் வீங்கும்
புலிக்கூட்டம் நம்கூட்டம்; உடலில் தைத்த
கூரில்லா வேலெடுத்தும் பகையை வீழ்த்தும்
குறிதவறச் செயல்வீரர்; வானில் மோதும்
கார்போன்ற களிறெறிவோரி! அன்னோர் முன்னர்
கள்ளநரி பாகித்தான் பிழைப்ப துண்டோ?
சீர்மிகுந்த பாரதமே வெற்றி கொள்ளும்!
செந்தமிழில் போர்ப்பரணி பாடு வோமே! 8

தேரோட்டிப் படைநடத்திச் செருக்களத்தில்
செங்குருதி வெள்ளத்தில் நீச்ச லிட்டுப்
போரிட்டு வாழ்ந்தவர் நாம்! நமது நாட்டில்
புகநினைத்தான் பாகித்தான்! ஈனக் கோழை!
நேரிட்டே உதைகொடுக்கும் நமது வீரர்
நெடும்படைமுன் பகைக்கூட்டம் தூள்!தூள்!தூளே!
போரிட்ட களமிருந்தே மக்கள் எல்லாம்
புதுப்பரணி போர்ப்பரணி பாடு வோமே! 9

களிறேறி வேலெறிந்து களத்தில் வந்த
கற்குன்றம் போலிருக்கும் வெறிபி டித்த
களிறெல்லாம் கண்டதுண்ட மாக வெட்டிக்
களவேள்வி செய்தவர்நாம்! நம்முன் இன்று
புளிமூட்டைப் பாகித்தான் எதிர்க்க வந்தான்;
புலிமுன்னர்க் காட்டெருமை போரா செய்யும்?
களிப்போடு தாயகத்தை வாழ்த்தி வாழ்த்திக்
கற்றோரே! போர்ப்பரணி பாடு வோமே! 10