உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


பாரதத்தின் வளத்தினிலே நாட்டங் கொண்டு,
     பலதுறையில் மெல்லமெல்ல ஏற்றங் கொண்டு
சீராக வளர்ந்திருந்தோம் பெருமை கொண்ட
     செஞ்சீனன் படையெடுத்தான்! சளைத்தா போனோம்?
நேராக எதிர்க்கார்த ஈனக் கோழை
     நெறிகெட்ட பாகித்தான் படையை யெல்லாம்
ஊரோர எல்லையிலே உருவை மாற்றி
     நுழையவிட்டான்; உதைபட்டான்; உதைபட் டானே.

முன்னாளில் பாரதத்தை அரபு நாட்டார்
     வெல்வதற்கு முனைந்தார்கள்; தோற்றுப் போனார் !
பின்னாளில் வெள்ளையர்கள்; அவர்கட் குள்ளே
     பெரும்போரே நிகழ்ந்ததுண்டு; பின்னர்த் தோல்வி!
இந்நாளில் பாகித்தான் வலியச் சண்டைக்(கு)
     இழுக்கின்றான்; மறைந்திருந்து தாக்கு கின்றான்!
எந்நாளும் தூங்குகின்ற புலியைக் காலால்
     இடறியவன் எவனேனும் பிழைத்த துண்டோ? 5

அல்லாடும் மதிமுகத்தார் நமது பெண்கள்
     ஆமைகளா? ஊமைகளா? பகைவர் முன்னர்
சொல்லாடப் பயிலாத தாவோ நம்நா?
     துயர் தாங்காச் சிற்றுளமோ நம்மோர் உள்ளம்?
மல்லாடப் பயிலாத தோளா நம்தோள்?
     வாளேந்தப் பயிலாத கையா நம்கை?
கொல்லேறு பாரதத்தார்! பாகித் தானைக்
     கொன்றுகுவித் தேவாகை சூடு வோமே! 6

அமைதியே நம்கொள்கை! நம்மைப் போல
     அண்டையயல் நாடெல்லாம் வாழ வேண்டி
இமியேனும் வழுவாது நடந்து வந்தோம்!
     இது தவறா? பாகித்தான் நம்மை யெல்லாம்

3