பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ அடையாது. ரொதோல்போ என்னைக் காதலிக்க வில்லை. ஆம்-அவன் வேறு பெண்ணைக் காதலிக்கிறான். நான் எதற்காக வாழ்வது, இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். அவனே என்னை வெறுக்கும் போது எனக்கேன் இந்த வாழ்க்கை. ஆம்-நான் இறந்துவிடவேண்டும். அவர்களைப் பழிவாங்கக்கூடாது. அன்றிரவு வந்து ஒளிந்திருந்தவன் ரொதோல் போதானா? என் உடலுக்குயிர்-விழிக்கு ஒளி அவனா வந்திருந்தான்?- ஐயோ கடவுளே! என்னால் எது உண்மையென்று புரிந்து கொள்ள முடியவில்லையே! உண்மையாக இருந்தால் ஆம் அந்தப் பெண்ணை- ராணியை- சர்வாதிகாரி யின் மனைவியைத் தீர்த்துக் கட்டி விடுவேன்அவன் மட்டும் என்ன அவனையுந்தான். அவன் என்னைக் காதலிக்கவில்லையென்றால் என்னால் வாழமுடியாது. நான் வாழாதபோது அவன் மட்டும் வாழ்வதா- அவன் காதற் கனி வாழ்வதா? முடியாது- முடியாது, தீர்த்துக் கட்டி விடவேண்டியதுதான். சர்வாதிகாரி வரட்டும். - - இது என்ன எனக்கு ஒரே குழப்பமாக இருக் கிறதே அவர்களா குற்றவாளிகள். என்னை அவன் காதவிக்கவில்லை என்றால் அதற்கு அவனா குற்றவாளி? அவள்தான் என்ன செய் வாள்? பாவம்? சாவப்போவது அவர்களா? நானா? எனக்கொன்றுமே புரியவில்லை. (ஆன்ழெல்லோ வருகிறான்) 35m Lā-8 ... . . . . . . . . - தீஸ்ப்-ஆன்ழெல்லோ , தீஸ்ப் : கோமானே! நீங்கள் என்னைத் தேடினீர்களாமே