83
சீர்மிகுத்து நிற்கின்ற என்றன் ஆசான்
பாவேந்தர் செந்தமிழும், கவிதை ஊற்றும்
ஊரறியும் பெருங்கவிஞர்! அவர்கள் தந்த
ஒப்பில்லாக் கவிதைகளை அறியும் நாடே!
காவேந்து மலர்மொய்க்கும் வண்டைப் போலும்,
கதிர்வரவை இசைக்கின்ற சிட்டைப் போலும்,
மாவேந்து கனிகோதும் குயிலைப் போலும்,
வான்பறந்து பாடுகின்ற புள்ளைப் போலும்
சாவேந்து நாள்வரையில் ஈன்ற அன்னைத்
தமிழ் மொழியை எம்வாழ்வை என்றன் ஆசான்
பாவேந்தர் தமிழ்க்கவிதை முறைபின் பற்றிப்
பாடுகின்ற இளங்கவிஞர் பலருள் ளாரே!
வான் பிறந்த பின்னரே மலையும் காடும்
மறிகடலும் மன்னுயிரும் பிறந்த தென்றே
தேன்பிறந்த செஞ்சொவ்வாய் அறிஞ ரெல்லாம்
செப்புகின்றார்! நல்லசைசீர்க் கவியென் கின்ற
நான் பிறந்த பின்னரன்றே இசையாற் கூத்தால்
நல்லகதை கட்டுரையால் நாட்டு மக்கள்
ஊன்பிறந்த இன்பத்தை வாரி வாரி
உலகிற்கே ஊட்டுகின்றார் மறுப்பார் உண்டோ?
என்பாடல் பழம்பாடல்;5 கிழமைப்6 பாடல்;
எழுகின்ற பாடலெலாம் இளநீர்ப் பாடல்!
முன்பாடல் வழிவகுத்த என்றன் ஆசான்
முத்தமிழின் பாவேந்தன் அளித்த யாவும்
தென்பாங்குத் தேன்பாடல்; உலகோர் போற்றும்
செந்தமிழின் அமிழ்தளிக்கும் தெவிட்டாப் பாடல்!
பின்பாடல் நான்பாடி அவையி ருந்தே
பிரிகின்றேன்! என்நன்றி! வணக்க மாமே!