64
சங்கா :- நாதா சிங்கத்தின் குருளை செம்மறியா
டாகப் போனதில்லையே
கந்தி : அப்படியும் நினைக்கிறார்களே சில செப்படி வித்தைக்காரர்கள் !
சங்கா : வித்தையிருக்கும் அவர்களில், விவேகம் இருக்காது !
ந்ேதி :- அவர்களில் ஒருவன் சாளுக்கிய மன் னன், நாம் கப்பம் கட்டவேண்டுமாம் அந்தப் பண்பற்ற பங்கயனுக்கு மறுத்தால் அவனைப் போரில் வெல்ல வேண்டுமாம் ! ஒலை விடுத்திருக்கிருன் உணர்வு கெட் உவன் :
சங்: நமக்கா? எப்போது நாதா?
15ந்தி : இன்று தான் யானையை வம்புக்கு இழுக் கிறது சோனி நாய்க்குட்டி !
சங் :- என்ன செய்யப்போகிறீர்கள் நாதா?
கந்தி : குருக்கோட்டை முற்றுகையிடுவதாக ஒலை யுனுப்பி விட்டேன். நாளை மறுநாள் கிளம்புகிறது நமது சிங்கப்படை !
கிருபு : அப்பா! நானும் வருகிறேனே போர் முனைக்கு !
கங்தி :- எதற்கடா மகனே ?
கிருப : கப்பம் கட்டச் சொல்லி நமக்கு உத்திரவிட் டானே கபோதி! அவன் தலையை நான் வெட்ட வேண்
டும்! எனது நாடு, எனது தாயகம் மாற்றானுக்கு அடி பணிந்து வாழும் நிலை வரக் கூடாதப்பா !