உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. தொல்லை களையும் தோழன்

அவையடக்கம்

(கலி வெண்டார்)

கத்து கடல்சூழ் கரைவாழ் தமிழகத்து
முத்துக்காள்! என்னுயிராம் மூத்தமிழின் மக்காள் என்
சீர்ப்புதுவைக் கல்வித் திருவமைச்சே! ஆறுமுகப்1
பேராள! அன்பனே! அண்ணாவின் பின்பிறந்தே
ஊராள வந்த ஒளிசேர்கல் மண்டபத்துச்
சீராள! செல்வச் சிறப்பாள! என்னெஞ்சில்
வேரூன்றிப் போன விரிவான் எழுந்துவரும்
கார் நிலவே! தென்றலே! செந்தமிழிற் கண்டநற்
சீர்தளை யாப்பின் செழுங்காப் பியமே!பே-
ரூரினிடையே உதவும் பழக்காடே
புத்தம் புதுமை பொலிகின்ற நற்புதுவை
பெற்றெடுத்த செல்வப் பெருங்குடி மக்காள்!
முதியோரே! கல்வி முறையுணர்ந் தோரே!
மதிமுகத் தாய்மாரே! மங்கை நல் லீரே!
வதுவை2 பெருக்கி வளம் பெருக்கி ஈன்ற
புதுவை அரசாளப் போகின்ற பிள்ளைகாள்!
என்றன் கலிப்பாட்டால் என்னிருகை கூப்பியே
நின்றேன் நீர் வாழ்க நிலைத்து!

(எண்சீர் விருத்தம்)


இவ்வாண்டு புத்தாண்டாம்! அறிஞர் அண்ணா
      இன்றிருந்தால் அவர்வயதோ அறுப தாண்டாம்!
இவ்வாண்டு புத்தாண்டாம்! பாவின் வேந்தர்

      இன்றிருந்தால் ஒன்றுகுறை எண்ப தாண்டாம்!