117
இவ்வாண்டு புத்தாண்டாம்! அண்ணல் காந்தி
இன்றிருந்தால் அவர்வயதோ ஒரு நூ ராண்டாம்!
இவ்வாண்டு வள்ளுவர்க்கோ ஆயிரத்தை
இரட்டிக்கும் புத்தாண்டாம்! வாழ்த்து வோமே!
(அறுசீர் விருத்தம்)
வள்ளுவர் புகழைப் பாட
மனத்திற்கு வலிமை யுண்டோ?
உள்ளெழுந் தெண்ணும் போதும்
உயிருக்கும் வலிமை யுண்டோ?
தெள்ளுதமிழ்க் குண்டோ? மற்றும்
திசைமொழிக் குண்டோ? சொவ்வீர்!
உள்ளத்துக் கெட்டா வான
ஒண்புகழ் விரிவென் பேனே!
(கலிவெண்பா)
தென்னவர்கள் வாய்பிறந்து சீர்பெற்று வாழ்ந்திருந்து
மன்னர் மடி தவழ்ந்த மாத்தமிழ்த்தாய் என்றென்றும்
கன்னி யெனும் பெயரைக் கண்டவள் தான்! என்றாலும்
பொன்னி வளயாற்றின் பொற்புடையாள்; வற்றாதாள்;
வானமே பொய்த்திடினும் வாரி வழங்குநன் செய்
ஏனல் விளைக்கும் இயல்புடையாள்! அஃதேபோல்
தந்தாள் பலபிள்ளை! தான் கன்னி கன்னியேதான்!
விந்தையென்று கொள்ளாதீர் வேறுவகை எண்ணாதீர்!
இந்தத் திருநாட்டில் எங்குப் பிறந்தாலும்
சொந்தமகார் போலெண்ணித் தூக்கி மடியிருத்தி
நல்ல முறையினிலே. நாடோறும் தூய தமிழ்ச்
சொல்லை உணவாக்கித் தொன்றுதொட்டு யார்யாரோ
பெற்றெடுத்த பின்ளையெலாம் பெற்றெடுத்த தாய்போலக்