47
மைத் : (சிரித்து) மானக்கேடு வரும்போது மனக் கொதிப்பு, பிறகு சுடுகாட்டு அமைதி. நல்ல வேடிக்கை ! என் ஆறுமாத அனுபவத்தில் இதுதானே உமது வாடிக்கையாக இருக்கிறது.
சக்தி : வெறுத்து விட்டது மனம், வெந்து நீராகி விட்டது பாசம். இனி விட்டிருக்கப் போவதில்லை அந் தக் கட்டெறும்புகளை ! -
மைத் :- வெறும் வாய்ப்பந்தல் படையெடுத்தால் உதவி செய்வதாக, பாண்டியனுக்கு ஒலையனுப்ப முடிவு செய் தோம் ! ஒன்றரை மாதங்களாயின. இன்று வரை அனுப்பவில்லையே?
சக்தி :- சேனதிபதியை வசப்படுத்துவதாக நீரும் தான் சொன்னிர் என்ன சாதித்தீர்?
மைத் - எதைச் சாதிக்க வேண்டுமோ, அதைச் சாதிப்பதிலே இந்த மைத்ரேயன் அணுவளவும் பின் னடைய மாட்டான். சந்திரவர்மா! வியப்படைய வேண் டாம் ! சேனதிபதி விக்கிரமகேசரி, இப்போது என் கையில் ஆளுல், அந்த வீரனை நாம் பயன் படுத்த நீர் ஒரு மகத்தான தியாகம் செய்ய வேண்டும், முடியுமா?
சக்தி - பல்லவ சிங்காதனத்தில் அமர இந்தப் பாவலன் எதையும் செய்ய சித்தமாயிருக்கிருன் !
மைத் :- வேருென்றுமில்லை, சேனதிபதியோடு வித்தியாவதி கொஞ்சி விளையாட நேர்ந்தால், நீர் நெஞ் சம் பதைக்கக் கூடாது! அவ்வளவுதான்.
சந்தி:- (திடுக்கிட்டு) ஆங்! என்ன சொன்னீர்?