காட்சி 9,
இடம் : வித்தியாவதி வீடு.
காலம் : பிற்பகல்.
(மனவேதனையோடு மைத்ரேயனும், சந்திரவர்மனும்)
சந்தி : மகாராணியின் ஒவிய விமர்சனம், என் மனதை அறுத்துவிட்டது மைத்ரேயரே !
மைத் : சித்ரவதையால் என்னைப் படுகொலையே செய்துவிட்டதே ! சந்திரவர்மா ! உமது அண்ணன் ஒரு மன்னன? மடையன் .ெ பண் புத் தி கேட்கும் பித்தன் !
சந்தி : என் மனம் பொறுமையை இழக்கின்றது !
மைத் . ஒவியத்திலே உம்மைக் கண்டதும், மகா ராணியின் மந்தகாச வதனம் போன போக்கைப் பார்த் திரோ?
சந்தி :- ஆம் ! என் உருவைக் கண்டு பொங்கி யெழுந்த பொருமைதான், அவர்கள் கலைக் கண்களையே குருடாக்கிவிட்டது !
மைத் :- வெளிநாட்டான் என்று என்னை இகழ்ந் தாாகள். தொலையட்டும் சொந்த நாடு, சொந்த இனம், சொந்தத் தம்பி உனக்கென்ன மதிப்பளித்தார்கள் ? அந்தச் சிங்காதனத்திலே நீர் இருந்திருந்தால்....?
சந்தி - நடந்திருக்காது இந்த ஒ ர வ ஞ் ச னை,
மைத்ரேயரே பொறுத்தது போதும், ஒழித்துக்கட்ட வேண்டும் என் சோதரனை !