இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
45
கந்தி : குற்றத்தை மறந்து குணத்தைப் போற்று! வோம். வளரட்டும் ஒவியக்கலை. மைத்ரேயரே
மைத் : மகாராஜா !
கந்தி : நீர் எந்த நாட்டைச் சேர்ந்தவரோ?
மைத் : ஏன்? தமிழ்நாட்டான் !
கந்தி : இல்லை, உண்மையை ஒளியாது கூறிடும்,
மைத் : (தடுமாதி மன்னிக்கவேண்டும், நான்..... நான். ஒவியன்...இருப்பது தமிழகமே...ஆனுல், பிறந் தது வடக்கே...சாளுக்கியபுரம் என்றாலும்...
நந்தி:- காஞ்சிமா நகரில் வந்து கலை வளர்க்கின் நீர். அச்சம் ஏன்? நாடு, இனம், மொழி எல்லைகளைக் கடந்தவளன்றாே கலைமகள் ! அப்பெருமகளை ஆராதிப் பதிலே எந்நாட்டவரும் பங்கு கொள்ளலாம். இதோ, இந்தப் பொன் முடிப்பு, உமது ஒவியத்திற்குப் பரிசு !
மைத் :- மகா பாக்யம் : மகா பாக்யம் !
(மன்னர் தர மகிழ்வோடு பெற்றுக் கொள்கிருன்..!