பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 விந்தன் இலக்கியத் தடம் ஆட்டிப்படைக்கவே விரும்புகின்றது. ஆணுக்குச் சரிநிகர் சமானமாகப் பெண்கள் இருக்கும் இக்காலக்கட்டத்திலும் பெரும்பாலான பெண்கள் அடிமை வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கின்றனர். பெண்கள் இந்நாட்டின் கண்கள். பெண்கள் நாட்டுத் தலைவியர்களாக, வழக்கறிஞர்களாக மருத்துவர்களாக, பேராசிரியர்களாக விஞ்ஞானிகளாக, விமான ஒட்டிகளாக, உலக சாதனை புரிபவர்களாக உயர்ந்துள்ளனர். ஆனால் சமூகம் இன்னும் உயராமல் தாழ்ந்தே இருக்கின்றது. அதனால் பெண்களின் வாழ்க்கை துன்பம் மிக்கதாக உள்ளது. பெண்கள் ஆண்களின் அடக்கு முறைகளாலும் அவர்களை அடிமைகளாக எண்ணும் எண்ணத்தாலும் பற்பல துன்பங்ளுக்கு ஆளாகின்றனர். துணிச்சலான பெண்கள் எதிர்த்து நின்று போராடுகின்றனர். துணிச்சலில்லாத பெண்கள், நமக்கு ஏன் இந்த வீண் வம்பு என நினைத்து எல்லாவற்றையும் சகித்துத் தமக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு வாழ்நாளைக் கழிக்கின்றனர். மாட்டுத் தொழுவத்தில் வரும் நாயகி கணவனின் அன்பு இல்லாமலே இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிறாள். இப்பொழுது மூன்றாவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள். அவளால் வேலை செய்ய முடியவில்லை. இதை அவளே இப்படிச் சொல்கிறாள் : மாதம் ஆக, ஆக எனக்கு வேலை செய்ய முடியவில்லையே என்ற குறை. மாமியாருக்கோ வேலை செய்யவில்லையே! என்ற குறை. இந்தக் குறைகளுக்கு இடையே எனக்கு ஏழாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. எல்லாப் பெண்களும் முதல் பிரசவத்துக்குத்தான் பிறந்தகம் செல்வது வழக்கம். இந்த விஷயத்தில் மட்டும் என் மாமியாருக்கு வேறு யாருக்கும் இல்லாத விசாலமான மனம். அவள், பிரசவத்துக்குப் பிரசவம் என்னைப் பிறந்தகத்துக்குத்தான் அனுப்பி வைப்பாள். அதே கதிதான் எங்கள் வீட்டு மாட்டுக்கும், பிரசவத்துக்குப் பிரசவம் அதையும் கிராமத்துக் ஒட்டி விடுவார்கள். நியாம்தானே? பால்