பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 123 மறத்துப் போன அந்த மாட்டுக்கு யாராவது தண்டத்தினி போட்டுக் கொண்டிருப்பார்களா? அதனுடைய நிலைதான் என்னுடைய நிலையும் வீட்டுக் காரியங்களையோ என்னால் இப்பொழுது செய்ய முடிவதில்லை. பின் ஏன் எனக்கு வெட்டிச் சோறு? இதோ, அப்பாவுக்குக் கடிதம் எழுதி அவரும் என்னை அழைத்துக் கொண்டு போக வந்துவிட்டார். பெற்றுப் பிழைத்தால் திரும்பி வருவேன். பழையபடி வீட்டுக் காரியங்களையும் கவனித்துக் கொள்வேன். அவரும் என்னைக் கவனித்துக் கொள்ள வேண்டிய விதத்தில் கவனித்துக் கொள்வார் வராமல் செத்தொழிந்தால் என்ன பிரமாதம்? அவர் வேறு கல்யாணம் செய்துகொண்டுவிடுவார். அவ்வளவுதான்; இப்பொழுது நீங்களே சொல்லுங்கள். நான் வாழ்வது, மனிதத் தொழுவமா? இல்லை. மாட்டுத் தொழுவமா? கதை முடிவை, படிப்பவர்கள் தீர்த்துக் கொள்ளும் படி விட்டுவிடுகிறார். கதைபடிப்பதற்கு கதைமாதிரியல்ல. வாழ்க்கையில் தமக்கு, அதாவது படிப்பவர்களுக்கு நடப்பது போலவே கதை தத்ரூபமாக அமைந்துள்ளது. விந்தன் அவர்களின் கதையைப் படிப்பதில் நாட்டம் ஏற்படுவதற்குக் காரணம் நாமும் கதாபாத்திரங்களாகிவிடுவதுதான். ஒரு பெண்ணின் நினைவுகளை - உணர்ச்சிகளை ஒரு ஆனால் இவ்வளவு தத்ரூபமாக எப்படி எழுத முடிகின்றது என்று நான் வியந்துதான் போனேன் விந்தன் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட பெண்கள் இருந்தது போலவே இன்னும் இப்படிப்பட்ட பெண்கள் இருக்கவே செய்கின்றார்கள். இவைகள் மாற காலமும் - சமுதாயமும்தான் பதில் சொல்ல வேண்டும். 1998