இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி 23.
இடம் , மலைக்காடு.
காலம் : மாலை
தந்தி : சேனுபதி படை வீரர்கள் தங்குவதற்குரிய வசதிகள் யாவும் செய்து முடித்தீரா 2
விக்ர: செய்துவிட்டேன் மகாராஜா!
நந்தி சேனுபதி தோல்வியடைந்த பங்கையன் தமது நிபந்தனைகள் யாவும் அப்படியே ஒப்புக்கொண் டானே அதன்படி நடப்பான? நீர் என்ன நினைக் கிறீர்?
விக்ர : திச்சயம் நடப்பான் மகாராஜா போரில் பெருத்த சேதம். நமது பலத்தை நன்றாக உணர்ந்து விட்டான்.
(ஒரு வீரன் வந்து வணங்குகிருன்)
கந்தி: காஞ்சியினின்றும் வருகிருயா? என்ன செய்தி?
வீரன் : மகாராணியாரின் முடங்கல்.
(கொடுக்க)
நந்தி: (வாங்கிப் படித்து) ஆ | இவ்வளவு பெரிய சதியா? எனது ஆட்சியைக் கவிழ்க்கவும், என்னைத் தொலைக்கவுமா? இவ்வளவு துணிவா?
விக்ர : மகாராஜா விளங்கவில்லையே!