பக்கம்:தமிழ் இனம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தமிழ் இனம்

வும் பேசுவதாகவும் எண்ணுவர். இந்த அளவு உண்மை நடிப்புச் சாக்கையனிடம் உண்டு.

சோழநாட்டில் சாக்கையர்

இச்சாக்கையர் சேரநாட்டோடு நிற்கவில்லை. சோழப் பேரரசனை முதலாம் இராசேந்திரன் காலத்தில், காமரசவல்லி என்னுமிடத்துச் சிவன் கோவில் விழாவில் நடித்த சாக்கையன் ஒருவனது கூத்தைப் பாராட்டி, அரசன் அவனுக்குச் சாக்கை மாராயன்’ என்ற பட்டம்தந்த செய்தியை அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகின்றது.[1]

நாம் சிலப்பதிகாரத்திலும் கல்வெட்டுக்களிலும் கண்டறிந்த சாக்கையரும் அவர்தம் கூத்து வகைகளும் இன்றளவும் மலையாள நாட்டில் இருத்தலைக் காண, மனம் மகிழ்ச்சி அடைகிறதன்றாே?


  1. 7. A. R. E, 1924-25, p. 82,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/75&oldid=1358388" இலிருந்து மீள்விக்கப்பட்டது