பேற்றை இழந்தேன். அவரின் எதையும் எதிர்கொள்ளும் இயல்பும், கடுமையும் என்னை அச்சமுறச் செய்தது. அன்று விலையுயர்ந்த வைரங்களைத் தவற விட்டுவிட்டு இன்று பாமரப் பெண்ணாக அவரின் புதையல்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
"தண்டவாளத்தை விட்டு இறங்கும் இரயில் வண்டி தரையில் ஓடாது" . வாழ்வுக்கும் சரியான பாதை உண்டு. அந்தப் பாதையை விட்டு நாம் விலகிச் சென்றால் பயணம் தடைபட்டு விடும். மனிதன் ஆறறிவு என்பதற்கு ஏற்ப வரையறுக்கப்பட்ட ஒழுக்கங்களுக்கு இணங்க வாழ்தல் வேண்டும். அதுவே மனிதன் என்ற பெயருக்குக்குரியதாகும்".
என்ற இம்மாதிரியான தந்தையின் எழுத்துக்களால் வயிறு என்னவோ நிரம்புவதில்லை. ஏழைகள் உணவைத் தேடுவதும், செல்வந்தர்கள் பசியைத் தேடுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அம்மாவின் மறைவிற்குப் பிறகு, வயிற்றுப்போர் அதிகரித்து விட்ட நிலையில் அத்தையின் முணுமுணுப்போடு வாங்கி வந்த அரைப்படி ரவையையும், உப்பிட்டு, கஞ்சி வைத்துக் குடித்து முடித்தாயிற்று.
என்னை அப்பா அழைத்தார். வந்தேன்.. எங்கெங்கோ கடன்பட்டு, துயர்பட்டு, எப்படி எப்படியோ, யார் யாளின் மூலமாகவோ அசுர முயற்சியோடு அச்சாகி வந்த கவிதைத் தொகுப்பு அது. பிரசவ வலிக்குப்பின் குழந்தையின் முகம் பார்க்கும் தாயைப் போன்ற மகிழ்ச்சியும், மலர்ச்சியும் தந்தது அப்பாவிற்கு.
புத்தகங்கள் விற்பனையானால்,
வறுமையின் பிடியிலிருந்து சற்றே விடுதலை
என்ற அவருடைய நம்பிக்கை,
கவிதைகள் மக்களைப் பெரிதும்
கவர்ந்து விடும் என்ற அவரின் கனவுகள்,
புரட்சிகரமான கருத்துக்கள் உள்ளதால், சிலரின்
47