உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சமர்ப்பணம்

இந்திய முதல் குடிமகனுக்கு
தமிழக மண்ணின் மைந்தனுக்கு!
ஒரு தாயின் குற்றச் சாட்டு:-
பிஞ்சு மனங்களைக் கொள்ளையடித்த குற்றம்
இளைஞர் உள்ளங்களில் குடிக் கூலியின்றிக் குடிபுகுந்த குற்றம்
பண்பட்ட மனிதர்களின் பாராட்டை லஞ்சமின்றி
வஞ்சனையாகப் பெற்ற குற்றம்
பத்திரிகைகள் கிசுகிசுக்க இயலாமல்
கை நெறித்துச் சபிக்கச் செய்த குற்றம்!
ஒட்டு மொத்த நூறு கோடி மக்களிடம் செலவில்லாமல்
மனம் என்னும் வாக்கைப் பெற்று வெற்றிபெற்ற குற்றம்
இதற்கெல்லாம் தண்டனையாக
என்றும் இறவாத வரமான
’மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிரீஇத்தாம் மாய்ந்தனரே'
என்ற புறநானூற்றுப் பாடலுக்கேற்ப
இந்திய இமயத்தின் தந்தையாக,
தமிழக அன்னையின் பிள்ளையாக,
மாற்றார் மனதிலும் மனிதராக
பாரத மக்களின் செல்வமாக -
நல்இதயக் கவிஞனாக
என்றும் நிலைபெற்று வாழும்
எனதருமைத் தலைமகனே! தலை வணங்கி
என் தந்தையின் இந்நூலை
உமக்குச் சமர்ப்பணமாக்குகிறேன்.

வெ.இரா. நளினி

- ஒரு பாமரத் தாய்-