72
தமிழக ஆட்சி
வரிகளைப் பெற்றுக்கொண்டனர். எனவே, அந்த இருவகைச் சாதியினரும், ‘நம்மைக் கொடுமைப் படுத்தியவர்களுக்குத்
“தங்க .இடம் உதவுவதோ, அவர்களுக்குக் கணக்கு எழுது வதோ, அவர்கள் சொல்வதை ஒப்புக் கொள்வதோ கூடாது; இம்முடிவுக்கு மாருக, நடப்பவர் கொல்லப்படுவார்,’ என்று தீர்மானித்தனர்.”
“அதிகாரிகள் விளைச்சலுக்கு ஏற்றவாறு வரி விதிக் காமல் மிகுதியாக வரி விதித்தமையால், நாம் ஊரை விட்டே ஓட நினைத்தோம். நம்முள் ஒற்றுமை இல்லாமை யால் நாம் கொடுமைப்படுத்தப்பட்டோம். இனி நாம் விளைச்சலுக்கு ஏற்றபடியே வரி செலுத்துவோம்; அதிகமாக விதித்தாலும் கொடோம்,’ என்று தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கொறுக்கை (குறுக்கை) என்றும் ஊரில் இருந்த வலங்கை - இடங்கைச் சாதியினர் தீர்மானித்தனர். அவர் களே இன்னின்ன பொருளுக்கு இவ்வளவு வரி என்று திட்ட மிட்டனர். கெய்ய்யா மரம், பாக்கு மரம், பனை மரம், வாழை மரம், கரும்பு, செந்தாமரை, முத்துக்கொட்டைச் செடி எள், புளி, இஞ்சி முதலியவை பயிரிட வரி விதிக்கப் பட்டது என்பது அத்திட்டத்திலிருந்து அறியப்படுகிறது.’
வரிச்சுமையால் குடிமக்கள் பயிர் செய்வதை விடுத்து, அயலூர்களில் குடியேறினமையும் உண்டு. அரசாங்கம் அவர்களை வருந்தி அழைத்து வரிச் சுமையைக் குறைத்த மைக்கும் சான்றுகள் பல உண்டு. பெருநகரில் இருந்த நெசவாளர் வரிகட்ட இயலாது வேறு ஊரில் குடியேறினர். விசயநகர அரசாங்கம் அவர்களது வரியைக் குறைத்தது, பழைய ஊரில் குடியேறும்படி வற்புறுத்தியது என்று கல்வெட்டுக் கூறுகின்றது. தென் ஆர்க்காடு மாவட்டத்தின்
1. 92 of 1918 2. 216 of 1917 3. 370 of 1923.