ஆராய்ச்சிக்குரிய மூலங்கள்
3
துள்ளார். எனவே, அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கண இலக்கியங்கள் வளம் பெற்றிருந்த உண்மை இதனால் பெறப்படுகின்றதன்றோ? பெறப்படவே, தமிழக ஆட்சி தொல்காப்பியருக்கு முன்னரே நெடுங்கால மாக இருந்துவருகின்ற ஒன்று என்பது தெளிவாகிறது.
இன்றுள்ள தமிழ் இலக்கிய நூல்களுள் காலத்தால் முற்பட்டவை திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பவை. இவற்றை அடுத்துச் சிலப்பதிகாரமும் மணிமேகலை யும் செய்யப்பெற்றன.
திருக்குறள் நாடு, நாட்டை ஆளும் அரசன் இலக்கணம், அமைச்சன் இலக்கணம், அரசின் அங்கமான ஒற்றர், தூதுவர் இலக்கணங்கள், படையின் இலக்கணம் என்பன போன்ற பல செய்திகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல், கலித்தொகை என்னும் நூல்களில் தமிழரசர் படை களைப் பற்றிய விவரங்கள், போர் முறைகள், வெற்றி தோல்விகள், போர் வீரர்களைப் பற்றிய செய்திகள், மறக்குடி மகளிர்பற்றிய செய்திகள், நீதி மன்றம், நீதி முறை, ஊர் மன்றம் என்பன போன்ற ஆட்சிக்குரிய செய்திகள் பல ஒரளவு ஆங்காங்குக் குறிக்கப்பெற்றுள்ளன.
மணிமேகலையிலும் தமிழரசர் தலைநகரங்களைப் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கின்றன. இச்சங்க நூல்கள் எல்லா வற்றிலும் சிற்றரசர்களைப்பற்றிய செய்திகளும் ஆங்காங்குக் காணப்படுகின்றன. அக்காலத்தில் நடைபெற்ற பயிர்த் தொழில், கைத்தொழில், உள்நாட்டு வாணிகம், வெளி நாட்டு வணிகம் பற்றிய விவரங்களும் கிடைக்கின்றன.
சங்க காலத்துக்குப் பின் தோன்றிய நாயன்மார் திருப் பாடல்கள், ஆழ்வார் அருட் பாடல்கள் போன்ற நூல்களில் பல்லவர், பாண்டியர் ஆட்சிபற்றிய செய்திகள் ஒரளவு