பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 குறுங் தொ ைக க்

தினுள் அவள். கண்டாள் அவள் தோழி. வருத்தம் போக்க முயன்றாள். ஏதேதோ சொன்னுள். ஏதும் பலன் தரவில்லை.

“வேடிக்கையாக எங்கேயாவது போய் வரலாம் வா !” என்றாள்.

“எங்கே போகலாம் ?’’

பேரூருக்கு”

‘என்ன அங்கே ?’’

‘திருவிழா’

பேரூர் என்ற பெயர் கேட்டாள். திருவிழா என்றும் சொல் லக் கேட்டாள். கேட்டதும் அவள் மனம் குழம்பியது. என்னவோ செய்தது. பழைய நினைவுகள் கண்முன் தோன்றின.

அன்று ஒரு நாள் தோழி அழைத்ததும், அவள் சென்றதும், அவனேக் கண்டதும், காதல் கொண்டதும், அணங்கைக் கூத்து ஆடியதும் எல்லாம் கினைவுக்கு வந்தன. மனம் துடித்தது.

‘போதுமடி போதும்’ என்று சீறிள்ை.

‘ஏன் கோபிக்கிறாய் ?’ எனறு கேட்டாள் தோழி.

‘அன்றும் இப்படித்தான் செய்தாய் ?”

எப்படிச் செய்தேன் ?”

‘திருவிழாவுக்கு வா, திருவிழாவுக்கு வா என்று துளைத் தாய். வந்தேன்’

‘அதற்கென்ன ?”

‘தழையும், தட்டையும், மணியும் தந்தான். உனக்கு இவை என்றான். இன்னும் என்ன என்னவோ சொன்னன்’’

“என்ன சொன்னன் ?”

‘இல்லாதன எல்லாம் சொன்னன் ! எனது பெண்மை நலத்தை உரிந்தான். போயிற்று. வருந்துகிறேன். இன்னும் எதற்காக என்னை அழைக்கிறாய் ?’ என்றாள்.

பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில் செல்வாம் செல்வாம்’ என்றி; அன்று, இவண் நல்லோர் நல்ல பலவால் தில்ல;