உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் இனம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள்

33

யும். அவ்வசைவை உணர்ந்த இந்திரன் உடனே எழுந்து நிற்பான் ; நின்று உடனிருக்கும் தேவர்களை நோக்கி, பூவுலகில் ஐந்தவித்த பெரியோன் தோன்றியுள்ளதை எனது பாண்டு கம்பள அசைவால் உணர்கிறேன். அவனுக்கு மன வணக்கம் செய்வோம்”. என்பான். இச்செய்தி சமண சமய நூல்களிலும் பெளத்த சமய நூல்களிலும் கூறப்பட்டுள்ளது. ஆபுத்திரன் என்னும் ஐந்தவித்த பெரியோன்முன் இந்திரன் தோன்றி மரியாதை செய்தான் என்று மணிமேகலை கூறுகிறது. இக்கருத்தே மேற்சொல்லப்பட்ட திருக்குறளுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று கூறலாம்.

மற்றாெரு குறள்

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.”

[றாங்கு

இக்குறளுக்குப் பரிமேலழகர், “பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்து இடத்தும் செய்யும் அறத்தை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடை அறமாம்” என்று கூறி, மேலும், அரசனுக்கு இறைப் பொருள் ஆறில் ஒன்று ஆயிற்று. இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பது அறிக,” என்று உரை விளக்கமும் தந்துள்ளார். ஒருவனது வருவாயை ஆறாகப் பிரித்து அதில் ஒரு பகுதி அரசனுக்கும் மற்ற ஐந்தையும் மேலே சொல்லப்பட்ட தென் புலத்தார் முதலிய ஐவர்க்கும் பங்கிடல் வேண்டும் என்று திருவள்ளுவர் கருதியதாகப் பரிமேலழகர் பொருள் கூறுகிறார். மாதம் அறுபது ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் அரசனுக்கு வரி யாகப் பத்து ரூபாயும், தென்புலத்தார்க்குப் பத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/30&oldid=1357816" இலிருந்து மீள்விக்கப்பட்டது