பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

241

26

சொன்னவாறு அறிவார்

பாரதியார் பாடல்களிலே பாரதி அறுபத்தாறு என்று ஒரு பாடல். பல விஷயங்களைப்பற்றி அவரது சொந்த அபிப்பிராயங்கள் நிறைந்தது அது. அந்தப் பாடலில் காதலின் புகழைப் பாடுகிறார் கவிஞர்.

காதலினால் மானுடர்க்குக்
கவிதை உண்டாம்;
கானம் உண்டாம்; சிற்பமுதல்
கலைகள் உண்டாம்;
ஆதலினால் காதல் செய்வீர்
உலகத்தீரே!

என்று உலகோரைக் கூவியழைத்துக் கூறியிருக்கிறார். மேலும் காதலைப் பற்றிப் பேசும்போது,

நாடகத்தில் காவியத்தில்
காதல் என்றால்,
நாட்டினர்தாம்வியப்பு எய்தி
நன்று ஆம் என்பர்
வீடகத்தே, வீட்டில் உள்ளே
கிணற்று ஓரத்தே
ஊரினிலே காதல் என்றால்
உறுமுகின்றார்!

வே.மு.கு.வ -16