உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ஓ! ஓ! தமிழர்களே!

நாம் பாராட்டத் தவறினால், அவர்கள் வலிய வந்து கூப்பிட்டு உடனே பாராட்டத் தொடங்கி விடுவார்கள்: நாமோ ஒரு சிறிய படத்தைக் கண்ணாடிச் சட்டம் போட்டுக் கொடுத்தால், அவர்கள் ஒரு பெரிய நூலே வெளியிட்டு விடுவார்கள். ஆகையினாலே நம்மவர்களும் நம் புலவர்களும், அறிஞர்களும் அவர்களால் ஈர்க்கப் பட்டு-வளர்த்தெடுக்கப்பட்டு-அவர்களால் பெருமைப்படுத்தப்பட்டு, வையாபுரிகளாகவும், தெ. பொ. மீக்களாகவும், பக்தவச்சலங்களாகவும், சுப்பிரமணியன்களாகவும், கண்ணதாசன்களாகவும் இன்றைக்கு இருக்கிற வாழப்பாடிகளாகவும் மாறி விடுகிறார்கள், இன்றைக்கு இதுதான் நிலைமை!

நாம் போற்றிக் கொள்ளத் தவறுபவர்களைப் பார்ப்பான்
போற்றிக் கொள்கிறான்:

இந்த நிலையிலே நாம் சிலரைப் பாராட்டி உண்மையாகவே நம்மிடத்திலே எடுத்து வைத்துக் கொள்வதிலே ஒன்றும் தவறில்லை என்று கூட நான் நினைக்கிறேன். ஏன்? உண்மையும் இதுதான், நம்முடைய நிலைகளிலே ஏன் விபீடணன் இராமனிடத்தில் போய் இராவணனைக் காட்டிக்கொடுத்தான், கதைப்படி நான் வரலாற்றுப்படி கூட சொல்லவில்லை. கதைப்படி சொல்கிறேன். அவ்வீடணன் இராவணனுக்கு உகந்தவன். மிகவும் உயிருக்கு உயிரானவன். பின் ஏன் அவனைக் காட்டிக் கொடுத்தான் என்று சொன்னால், அவனிடத்திலிருந்து அவன் மாறுபட்டான். அரசியலில் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக அவன் எதிரியின் பக்கம் சென்றுவிட்டான். ஏன் இன்றைக்குக்கூட அரசியலில் அது தானே நடக்கிறது. அரசியலில் மட்டுமன்று அறவியலிலும் அதுதானே நடக்கிறது. நமது சிலப்பதிகாரமும், மணிமேகலையும் நமது சேரன் செங்குட்டுவன் கதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/30&oldid=1163303" இலிருந்து மீள்விக்கப்பட்டது