உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

19

யார் மேல் ஆசிரியப் பற்று கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் அவர்கள் இருவருமே நெருக்கமாகப் பழகினார்கள். உண்பதிலிருந்து உறங்குவது வரை இரண்டுபேரும் மிகவும் ஒன்றியிருந்தவர்கள். இதை அவர் வாயாலேயே சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பாரதிக்குத் தாசன் என்பதால்தான் பாரதி தாசனைப்
பற்றிப் பார்ப்பனர்கள் பேசுகிறார்கள்:

எனவே பாரதிதாசன் என்று தொடக்கத்தில் நமது விவேகி அவர்களிடத்திலே குறிப்பிட்டதைப் போலே 'அதைத் தவறாக வைத்துக் கொண்டேன்’ என்று சொல்லியிருந்தாலுங்கூட, அப்படி வைத்துக் கொண்ட பெயரைத்தான் வளர்த்தெடுக்க எதிரிகள் விரும்பினார்கள்; இன்றைக்கும் விரும்புகிறார்கள். பாவேந்தர் என்ற சொல் அவர்கள் வாயிலே வராது. பாரதிதாசன் என்று சொல்லில் தான் அவர்களுடைய பாரதியும் இருக்கிறார். அவர்கள் நினைக்கும் தாசனும் இருக்கிறார். பாரதிதாசனுக்கு இப்போது கிடைக்கும் கொஞ்ச நஞ்சம் மதிப்பு கூட தொலைக்காட்சியிலே அவரின் பாடல்களை-திரைப் படங்களிலே அவருடைய பாடல்களை-அல்லது ஏதாவது சொற்பொழிவு பேச்சுகளிலே, பட்டிமன்றங்களிலே, பாட்டரங்குகளிலே, மேடைகளிலே, அவருடைய தனித்தன்மைகளை எடுத்துச் சொல்கிறார்கள் என்று சொன்னால், அதில் பாரதிக்குத் தாசன் என்பதை வலியுறுத்திக் கொண்டிருக்கவேண்டும்: என்பதே அவர்களுடைய நோக்கம். பார்ப்பனீயத்தின் நச்சு வேர் அதுதான். அதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நம்மவர்கள் அதை விளங்கிக் கொள்வதே இல்லை, இன்றைக்கு நம்முடைய சண்முக சுத்தரனார் சொன்னது போல நம் புலவர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/29&oldid=1163302" இலிருந்து மீள்விக்கப்பட்டது