18
ஓ! ஓ! தமிழர்களே!
'புதியதோர் உலகம் செய்வோம்' என்று பாவேந்தர் பாடலாகச் சொன்னாரே அது போல வழிகாட்டும்.
பாரதியும் பாரதிதாசனும்!
பாரதிதாசன் என்று நான் சொல்ல மாட்டேன் என அய்யா (எசு.டி.விவேகி) அவர்கள் சொன்னார்களே, அதுபோல, நாங்கள் பாரதிதாசன் என்று சொல்வதில்லை. தேவையில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா? பாரதியாரைத்தான் அவர்கள் பாராட்டுகிறார்கள். நம்மவர்களும் பாரதியார் பெயரைச் சொன்னால்தான் தங்களுக்குப் பெருமை என அறிஞர்களும்,புலவர்களும், பேராசிரியர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பாரதிதாசன் என்று அவர்தம் பெயரை வைத்துக்கொண்டதால் தான் அவருக்கு இந்த அளவுக்காவது பெயர் கிடைத்தது. பாரதிக்குத்தாசன், பாரதிக்குத்தாசன் என்று அவர்கள் சொல்லிக் கொள்வதில் அவர்களுக்குப் பெருமை. எங்கள் பாரதியாருக்கு ஒருதாசன். அவரும் தெரிந்து வைத்துக் கொண்டாரோ இல்லையோ. அந்த நிலையிலே அவர்கள் காலத்தின் ஆழமான வரலாற்றுத் தன்மைகள் என்ன, பாரதியின் நிலை என்ன என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று; நான் பாவேந்தர் அவர்களிடம் நேரிடையாகப் பழகியதாலே, சொல்லுகிறேன். பாரதியாரைப் பற்றி எது சொன்னாலும் உடனே சினம் வரும்; அவரைப் பற்றிக் குறைத்துச் சொன்னாலும் தவறு என்பார். சினங்கொள்வார். ஆனால் பாவேந்தர் அவர்கள். இயற்கையுணர்வு உடையவர் ஆனதினாலே - பாவலர் தன்மை உடையவர் என்பதனாலே - இந்த வகையிலே அவர் தெளிவாக அவருடைய கொள்கையை வகுத்துக் கொண்டிருக்க முடியாது. பாவேந்தரைப்போல் பார்ப்பனீயத்தை மிகக் கடுமையாக எதிர்த்த தமிழறிஞர் - பேரறிஞர் - வேறெவருமே இல்லை. ஆனால் பாரதிச