நா. பார்த்தசாரதி . - 31
அதைச் செலவழிக்கும் ஆற்றல்மட்டும் குறைந்திருப்பதற்குக் காரணம் என்ன? என்று சிந்தித்துக் கொண்டே நடந்தான் அழகிய நம்பி, - -
ஊரிலிருந்து புறப்படும் போது பிரமநாயகத்துக்கும் சேர்த்துப் பணம்கொடுத்து அவன்தான் டிக்கெட் வாங்கி யிருந்தான். முறைப்படி அவர்தான் அவனை வேலைக்கு அழைத்துக்கொண்டு போகிறவர். டிக்கெட் அவனுக்கும் சேர்த்து அவர் வாங்கியிருக்க வேண்டும். அவர் அப்படிச் செய்யாதது அவனுக்கு வியப்பை அளித்தது. 'தம்பி! நீயே டிக்கெட் வாங்கி விட்டாயா? அடேடே! என்னைக் கேட் டிருக்கலாமே?” என்று மரியாதைக்காவது உபசாரமாக இரண்டு வார்த்தைகள் சொல்லுவார் என்று எதிர்பார்த் தான். அந்தப் பேச்சையே எடுக்கவில்லை அவர்.
பசி வயிற்றைக் கிள்ளியது. உடனே ஏதாவது ஒட்டலில் நுழைந்து சிற்றுண்டி சாப்பிட வேண்டும் போலிருந்தது. பிரமநாயகம் எள்ன சொல்லுவாரோ என்ற தயக்கத்தினால் பேசாமல் நடந்துகொண்டிருந்தான். துறைமுகத்துக்குப் பேர்வதற்குள் அவராகவே ஏதாவதோர் ஒட்டலுக்குச் சிற் றுண்டி சாப்பிட அழைத்துச் செல்லுவார் என்ற எண்ணம் அவனுக்கு இருத்தது. ஆனால், அது வீணாயிற்று. துறைமுக வாசலில் சுங்கச்சாவடியை அடைகிறவரை பிரமநாயகம் சிற் றுண்டிப் பிரச்னையைக் கிளப்பவே இல்லை. கூலிக்காரர்கள் சாமான்களைக் கீழே வைத்ததும், தம்பி அழகு!என்னிடம் சில்லறையாக இல்லை. இவர்களுக்கு ஆளுக்கு எட்டனா கூலிகொடுத்து அனுப்பு...' என்றார் பிரமநாயகம். அவன் ஒரு கணம் திகைத்தான். பதில் பேசாமல் சட்டைப் புைக்குள் கைவிட்டு இரண்டு அரை ரூபாய் நாணயங்களை எடுத்துக் கூலிக்காரர்களுக்குக் கொடுத்து அவர்களை அனுப்பின்ான். பஸ் கட்டணம்,சுமைகூவி எல்லாம் கொடுத்த பின் தன்னிடம் மீதமிருக்கும் ஆஸ்தியை எண்ணிப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. . .