உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெற்றிக்கண்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 39

டக்கென்று-எதிர்ப்பக்கம் டெவிபோன் வைக்கப்பட்டு விட்ட ஒசையையும் காத்திருந்து கேட்ட பின்பே-அவசர கமில்லாமல் பொறுத்திருந்துவிட்டுத்தான் தன் பக்கம்ரெnவரை வைத்தான் சுகுணன்.

கடிதங்கள், அந்த இரண்டு மூன்று நாளில் வந்திருந்த கதைகள், கட்டுரைகள், கொஞ்சம் பருமனான கட்டாகக் குவிந்திருந்த கவிதைகள் எல்லாம் தனித்தனியே அவன் மேஜையில் இருந்தன. மேஜைமேல் இலேசாக ஒரு மெல்லிய தூசி மூட்டம்-விரலை வைத்தால் அடையாளம் பதிகிற மாதிரிப் பரவியிருந்தது; அப்போது அன்று அவன் மனம் இருந்ததைப் போல. மணியை அடித்தான். பையன் வந்து மேஜையைத் துடைத்துவிட்டுப் போனான். பக்கத்து அறை அதே மாருதி பப்ளிகேஷன்ஸைச் சேர்ந்த தினசரி இதழான காலை மலரின் ஆசிரியர் அறை. இரண்டிற்கு மிடையே ஒரு தடுப்பு உண்டு. அங்கே டெலிபிரிண்டர் இயங்கத் தொடங்கி விட்டதற்கு அடையாளமாக ஒலி எழுந்தது. தொலைவில் அதே காம்பவுண்டிலிருந்து அச்சகத் தின் இயந்திர முழக்கம் ஜன்னல் வழியே மெல்லக் கேட்டுக் கொண்டிருந்தது. கடிதங்களைப் படிக்க எடுத்த சுகுணன் யாரோ உள்ளே வருவதற்கடையாளமாக ஸ்பிரிங் கதவு கிரீச்சிடவே வருகிற ஆளை. எதிர்கொள்ள நிமிர்ந்தான். ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார். -

' என்னங்க இப்படிச் செய்திட்டீங்க?" "எதை எப்படிச் செய்தேன் நாயுடு?" "அதுதான்...நம்ம ஐயா கொழந்தை கல்யாணத் தன்னிக்கிப் பார்த்து வெளியூருக்கு எங்கோ பூட்டீங்களே சார்! உங்க கதைன்னாத் துளசிம்மாவுக்கு உசீர். பாவம்! நீங்க வராதது அதுக்கேகூட வருத்தமாயிருந்திருக்கும்."

என்ன செய்வது நாயுடு; காரியம் தவிர்க்க முடியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/41&oldid=590407" இலிருந்து மீள்விக்கப்பட்டது