பக்கம்:சிந்தனை மேடை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

连笠、 எங்களுக்குள் இந்த உடன்படிக்கை ஏற்பட்ட காலத்தில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் கோடைக்கானல் ரோடு நிலையத். தில்நின்று கொண்டிருந்தல்ை இதைக் கோடைக்கானல் உடன் படிக்கை’ என்று பெருமையாக அழைக்க முடியும். லாவோஸ் உடன்படிக்கை நாட்டோ,விட்டோ இணைப்பு உடன்படிக்கை என்றெல்லாம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளே அழைப்பதுபோல் எங்களுடைய இர யில் உடன்படிக்கையையும் அழைத்துப் பார்க்க வேண்டு மென்று எனக்கு ஓர் ஆசை. நம்முடைய வீட்டில் கட்டிலும் மெத்தையும் போட்டுக் கொண்டு பெரிய மின் விசிறிக் காற் றின் கீழே சொகுசாகப் படுத்து உறங்குகிற பல நாட்களில் தூக்கமே வ்ராமல் நாம் தவிப்போம். ஒரு வசதியுமில்லாமல் மற்றவர்களின் வேர்வை நாற்றமும், மூச்சுக் காற்றும் நிறைத் துள்ள இரயில் பெட்டியின்மூன்ரும் வகுப்புக் கூட்டத்திலோ கிடைக்கிற இடத்தைப் பிடித்துக் கொண்டு தூக்கம் நம்மி ட்ம் பேயாய்ப் பறந்து வரும். போட்டியும் நெருக்கடியும் மண்டிக் கிடக்கின்ற இந்த உலகத்தில்தான் சுகமும் இருக்கிறது’ என்ற அநுபவத்தை இரயில் பயணத்தின்போது நீங்கள் உணர முடியும். அந்த அநுபவம் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு பாடம். இரயில் ப்யணத்தின்போது ஆரம்பத்தில் எதிரிகளாகச் சுந்தித்தவர்கள் கடைசி வரை எதிரிகளாகவே இருப்பார்கள் என்பது உறுதியில்லை. நண்பர்களாகச் சந்தித்தவர்களும் அப்படித்தான். இரயில் பயணம் சுகமும், துக்கமும், சுகதுக் கத்தில் அடங்காத இன்னும் பல்வேறு உணர்வுகளும் கலந்த ஒர் அநுபவம். இந்த அநுபவத்தை எப்படி எடுத்துக் கொள் வது என்பது அவரவர்கள் மனோபாவத்தைப் பொறுத்தது. சுமைகளும் கவலையும் - சுமைகளைப் பொறுத்த மட்டில் உங்கள் அநுபவம் எப். படியோ? பயணம் செய்யுய்போது கூட்டிலிருந்து விடுபட்டுப் பறக்கும் பறவையைப் போலப் பிணிப்பற்று விட்டு விடுதலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/15&oldid=825869" இலிருந்து மீள்விக்கப்பட்டது