உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 19

"தம்பீ! இந்த லாரியை நீங்க கவனிச்சுக்கிறீங்களா?' என்று செயலாளர் முத்துராமலிங்கத்தை அணுகியபோது அவன் திடுக்கிட்டான். தனக்குப் பிடிக்காததும் தனக்குப் பொருந்தாததுமான ஒரு கொச்சையான காரியத்தைத் தன் தலையில் அந்த ஆள் கட்டி விடுவானோ என்ற அருவறுப்பும், கூச்சமும், தயக்கமும், தற்காப்பு உணர்வுமாக அவன் திணறித் தவித்தபோது, - s -

'அண்ணனை விட்டுடுங்க. அதையெல்லாம் நானே பார்த்துக்கிறேன்'-என்று ஓர் இனிய பெண் குரல் முன் வந்து அவனைக் காப்பாற்றியது. முத்துராமலிங்கம் திரும்பிப் பார்த்தான். எங்கோ அடிக்கடி கேட்டுப் பழகிய குரல் போல இருந்தது. -

அந்தக் கட்சியின் கலைநிகழ்ச்சிக் குழு ஒன்றின் தலைவி யான கலையரசி குமாரி கண்மணி சிரித்தபடி நின்றுகொண் டிருந்தாள். கொஞ்சம் அதிகப்படியான சிரிப்பு: கொஞ்சம் அதிகப்படியான கவர்ச்சி; அதிகப்படியான வார்த்தை அரட்டை. எல்லாம் அதிகப்படியாகவே இருந்தன அவளிடம். - - . 'அம்மா தாயே. அல்லி ராணி! நீ இருக்கியா இந்த லாரியிலே...கையிலே வெண்ணெயை வச்சுக்கிட்டு யாரா வது நெய்க்கு அழுவாங்களா..?' என்று கட்சிசி செயலா ளரே கண்மணியிடம் குழைந்தார். - *

செயலாளர் அடுத்த லாரிக்கு நகர்ந்தபின், நல்ல சமயத்திலே என்னைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி. யம்மா!' என்று கண்மணிக்கு நன்றி கூறினான் முத்து ராமலிங்கம். அவள் அவ்னை ஏறிட்டுப் பார்த்துச் சிரித் தாள். சொன்னாள்: .

நீங்க இந்தக் கட்சி ஆளில்லே. இதிலே.வர்ரிங்கங் கறத்துக்காக உங்களைக் கோஷம் போட்சி சொன்னா எப்பிடி?" . - - -

கலையரசி கண்மணி என்கிற அந்தப் பெண்ணைப் பற்றித் தான் கேள்விப் பட்டிருந்தவற்றையும், அறிந்திருந்த