நா. பார்த்தசாரதி 39
சர்க்கிள் குருசாமி சேர்வையைச் சந்தித்தபின் முத்து இராமலிங்கமும் அதே மனநிலையில்தான் இருந்தான். நகரம் என்பது ஏமாற்றக்கூடிய கலையில், விசுவாசத்தை இழக்கக் கூடிய கலையில் கைதேர்ந்து முதிர்ந்திருப்பதாக அவனுக்குப் புரிந்தது. அங்கு யாரும் நன்றி விசுவாசங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. - -
நவீன அரசியல் பிரம்மோற்சவமாகிய பதவி ஏற்பு வைபவத்துக்காகத் தலைநகரம் விழாக்கோலம் பூண்டிருந் தது. எங்கும் கட்சித் தோரணங்கள், சுவரொட்டிகள், வென்றது போதுமா? இன்னும் வேண்டுமா?-என்ற வாசகங்களைச் சுமந்த சுவர்கள், என்று, ஒரே கோலாகலத் தில் திளைத்திருந்தது நகரம். நகரமே வெறும் கோஷங் களாலும் சுவரொட்டிகளாலும் நிரம்பியிருந்தது. கல்லூரிக் குள் ஒடித்த வேப்பங்கிளையின் சிறு குச்சியினாலேயே பல் விளக்கிவிட்டுக் கடற்கரை உள்மணலில் இறங்கிய போது மணல் பள்ளம் ஒன்றில் ஊற்றுப் போல் தோண்டிப் பானை யில் சேகரித்த நீரை ஒரு கிளாஸ் ஐந்து பைசா வீதம் விற்றுக் கொண்டிருந்த ஒர் ஆளிடம் இரண்டு கிளாஸ் தண்ணிர் வாங்கிப் ப்ல்துலக்கிக் கொள்ள முடிந்தது.
பச்சைத் தண்ணிருக்குப் பத்துப் பைசாவைச் செல வழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போதே தான் இருப்பது சென்னை நகரம் என்று உறைத்தது முத்துராம லிங்கத்துக்கு. மறுபடி நடந்து ஐஸ்ஹவுஸும் திருவல்லிக் கேணியிலிருந்து கடற்கரையை நோக்கி வரும் சால்லையும் சந்திக்கும் முனையில் பாதையோரத்து மேடையில் ஆப்பக் கடை போட்டிருந்த ஆயா ஒருத்திக்கு முன்னால் குத்த வைத்து உட்கார்ந்தான் முத்துராமலிங்கம். கொஞ்சம் நாகரிகமாக உடையணிந்த சூட்கேஸுடன் கூடிய ஒர் 'இளைஞன் தன் கடை முன் குத்தவைத்து உட்கார்ந்தது அந்தக் கிழவிக்கே ஆச்சரியத்தை அளித்தது.
ஆனால் நகரவாசி அல்லாதவனுக்கே உரிய முன் ஜாக்கிரதையுடன் அவன் ஆப்பம், இட்லி வகையறாக்