உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன் 31

மானிட சமுதாயத்தினரின் வாழ்வு எவ்வாறு நாகரிகப் பரிணாமம் பெற்று வந்திருக்கிறதென்பது விவரிக்கப் பெறுகிறது.

கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த இந்தோ இரானிய சமுதாயத்தினரைப் பற்றி அவர் விவரிக்கிறார்:

வட்சு நதிக்கரையின் வடபுலம், இன்றைய சோவியத் ஒன்றியத்தின் தாஜிகிஸ்தான் குடியரசிலும், தென் பகுதிகள் ஆப்கானிஸ்தானத்துக்கு உரிய பிரதேசங்களாகவும் இன்று திகழ்கின்றன.

வடபுலத்தில் அந்நாள் வாழ்ந்த சமுதாயத்தினர் ‘மனிதன் ஒரே இடத்தில் இருப்பதற்காகப் படைக்கப்படவில்லை' என்ற கொள்கை உடையவர்களாக வாழ்ந்தனர். மலைச்சரிவுகளிலும் சமவெளிகளிலும், ஆடுமாடுகளையும் குதிரைகளையும் பழக்கி அவற்றையே செல்வமாகக் கொண்டு வாழ்ந்தனர்.

ஆனால் தென்புலத்து மக்கள், விவசாயம், உலோகங்களைப் பயன்படுத்தும் கலை, என்று நாகரிகத்தில் மிகவும் முன்னேற்றம் கொண்டிருந்தனர்.

அப்போது, வடபுலத்து முதியவர் ஒருவர் பிரலாபிப்பதால் ஆசிரியர் இந்நூலில் இவ்வாறு சித்தரிக்கிறார்:

"பூமியை மாதா என்றும் தேவி என்றும் கூறுகிறோம். பூசையும் செய்கிறோம். இந்தப் பாவிகள் பூமியின் நெஞ்சைப் பிளந்து விவசாயம் செய்கிறார்களாம்? பூமி மாதாவை எங்கள் முன்னோர் இப்படி அவமானப்படுத்தியது இல்லையே? பூமித்தாய், தானாக நமது ஆடுமாடுகள், குதிரைகளுக்குக் கனிந்த பசும்புல்லை ஏராளமாகத் தருகிறாள். நமக்கோ காய் கனிகள் பறிக்கப்பறிக்கக் குறையாது. காடுகளில் கோதுமை தானாகச் சிறு மணிகளாகக் கதிர் முற்றி இருக்கும். நமது ஆடுமாடுகள் கொழுக்க மேயும். நமக்கு உணவுக்குப் பஞ்சமிருந்ததா?

"இப்போது இவர்கள் பூமிமாதாவை அகழ்ந்து கோதுமை விளைவிக்கிறார்கள். நமக்குப் புல் செழித்து வளருவதில்லை.