20 காலந்தோறும் பெண்
மணமகன் வருவதும், பெண் வீட்டிலேயே அந்தச் சடங்குகளை நடத்துவதும், பண்டைய பழக்கத்தின் சிதிலமாகிப்போன சிறு சுவடு என்றுகூடச் சொல்லலாம்.
இந்தியாவில் இன்னமும் சில பிரிவினரிடையே திருமணம் முடிந்ததும் உடனே பெண் தாய் வீட்டைவிட்டுச் சென்று விடுவதில்லை. குறிப்பிட்ட காலம் வரையிலும் தங்கிய பின்னரே கணவன் வீடு செல்கிறாள் இவள். சில பழங்குடி இனத்தாரிடையே திருமணச்சடங்கு முடிந்ததும் பெண் வீட்டிலேயே, மணமகளையும் மணமகனையும் சில நிமிடங்கள் ஓர் அறையில் இருக்கச் செய்கிறார்கள்.
திருமண விருந்து முதலில் பெண்ணின் வீட்டில் படைக்கப்படுவதாக இருப்பதும்கூட, பெண்ணின் மேலான சமுதாய மதிப்பை விளக்கும் அம்சம்தான்.
“உயர் பதிவிக்குரிய, பரீட்சையில் தேர்வு பெற்ற முதல் வகுப்பு வங்கி அதிகாரியாகப் பதவியேற்றிருந்தாயே, ஏனம்மா வேலையை விட்டுவிட்டாய்?”
"ஓ, என்ன செய்வது அம்மா. என்னை எங்கோ குஜராத்திய மாநிலத்துக் கிராமத்துக்கு மாற்றிவிட்டார்கள். மேலும் திருமணமாகிவிட்டது. கணவன் வீட்டார் வேலையை விட்டுவிடச் சொல்லிவிட்டார்கள். கையில் இப்போது ஒருவயதுக் குழந்தை இருக்கிறது. வேலை இருந்தால் பிரச்னைதானே? விட்டேன்." இப்படி வேலையை விடும் நமது இளம்பெண்கள் இந்நாள் நம்மிடையே பலர் இருக்கிறார்கள்.
இதுவே பல்லாயிரக்கணக்கான நாகரிக வளர்ச்சியின் அடையாளமா?