உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3. மக்கள் பேறு

நல்ல பிள்ளைகளைப் பெறுவதின் நன்மை.

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல்.

(ப-உ) மகன்-ஒரு பிள்ளை, தந்தைக்கு-தன்னைப் பெற்று அறிவாளி யாக்கிய தகப்பனுக்கு, ஆற்றும்-செய்ய வேண்டிய, உதவி-பதில்உபகாரம் என்னவென்ருல்,(பிறர் அப்பிள்ளையைப் பார்த்து) இவன் தந்தை-இப்பிள்ளையின் தகப்பன், என் நோற்றான் கொல்-என்ன தவம் செய்தானே, எனும் சொல்-என்று பாராட்டும் புகழ்ச்சிச் சொல்லாகும்.

(க-உ) தன் தந்தையைப் பிறர் புகழும்படியாகப் பிள்ளை நடந்துகொள்ள வேண்டும்.

உதவி-எழுவாய் , சொல்-பயனிலை.

4. அன்புடைமை
எல்லோரிடத்திலும் அன்பு வைத்தல்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

(ப-உ) அன்பு இலார்-பிறரிடத்து அன்பு இல்லாதவர்கள், எல்லாம்-எல்லாப் பொருள்களையும், தமக்கு உரியர்-தங்களுக்கே உரியனவாக வைத்துக்கொள்வர்கள். அன்பு உடையார்-பிறரிடத்து அன்பு உடையவர்களோ, என்பும்-தம் எலும்பையுங்கூட, பிறர்க்கு உரியர்-பிறர்க்கு உரியதாகிப் பயன் தரும்படிச் செய்வார்கள்.

(க.உ) அன்புடையார் தன்னலமே கருதாது, எல்லாவற்றையும் பிறர்க்கு உதவுவார்கள்.

அன்பிலார்-எழுவாய் , தமக்குரியர்-பயனிலை. அன்புடையார்-எழுவாய் ; பிறர்க்குரியர்-பயனிலை.

8