உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. இடன் அறிதல் காரியம் செய்வதற்கு எற்ற இடத்தை அறிதல். கடல்ஒடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. (ப-உ) கால்வல் - (தரையில் ஓடக் கூடிய) சக்கரம் வலிய, நெடுந்தேர்-நீண்ட தேர்கள், கடல் ஓடா-கடலில் ஓடமாட்டா. கடல் ஓடும்-கடலில் ஓடுகின்ற, நாவாயும்-கப்பலும், நிலத்து ஓடா-தரையில் ஓடமாட்டா. (க-உ) எவரும் தமக்கு எற்ற இடத்தை அறிந்து செய்யின் காரியம் கை கூடும். தேர்-எழுவாய் ; கடல் ஓடா-பயனிலை. நாவாய்-எழுவாய்; நிலத்து ஓடா-பயனிலை. 34. சுற்றம் தழாஅல் சொந்தக்காரர்களைத் தழுவிக் காத்தல். காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. (ப-உ) காக்கை-காக்கையானது, கரவா-தனக்குக்கிடைத்த உணவை மறைக்காமல், கரைந்து-தம் இனத்தையும் கூவி அழைத்து, உண்ணும்-சேர்ந்து சாப்பிடும். அன்ன நீரார்க்கேஅப்படிப்பட்ட தன்மையுள்ள மனிதருக்கே, ஆக்கமும்-செல்வங் களும், உள-உண்டாகும். (க-உ) சொந்தக்காரர்களையும் தழுவிக் காப்பாற்றினால் நன்மைகள் உண்டாகும். ஆக்கம்-எழுவாய் உள-பயனிலை. 23