பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

நெஞ்சக்கனல்


“எக்ஸ்க்யூஸ் மீ சார்!...நோ நீட் டு வெயிட். ஐயாம் டேக்கிங் லீவ்...”

–பதில் பேசாமல் முதலமைச்சர் கைகூப்பினார். கமலக்கண்ணனும் பதில் பேசாமல் கைகூப்பிவிட்டு வெளியேறினார். வராந்தாவில் பத்திரிகை நிருபர்கள் வழிமறித்தனர்.

“எனி...நியூஸ்...ஃபார் பிரஸ்...”

“நோ...நோ...நியூஸ் ஃபரம் மை எண்ட்...”

“ஏதாவது கேட்கலாமா சார்...!”

“ஆஸ்க் யுவர் சீஃப் மினிஸ்டர்...ஹி வில் டெல் யூ நியூஸ்...”

–இந்த பதிலில் ஆஸ்க் ‘அவர்’ சீஃப் மினிஸ்டர், என்று கமலக்கண்ணன் கூறாமல் ‘ஆஸ்க் யுவர் சீஃப்மினிஸ்டர்’ என்று கூறியதிலேயே தங்களுக்கு வேண்டிய பதில் இருப் பதைப் பத்திரிகை நிருபர்கள் புரிந்து கொண்டார்கள். அப்படிக் குறிப்பாக அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே தான் கமலக்கண்ணனும் அப்படிக் கூறியிருந்தார். மேலும் வாயைக் கிளறும் நோக்கத்துடன் ஒரு துடிப்பான நிருபர் கமலக்கண்ணன் காரில் ஏறுமுன் கேட்டார்.

“எனிமோர் நியூஸ் டு ஸே...?”

“நத்திங் மோர் டு ஸே...”– என்று கூறி கார்க்கதவைக் கொஞ்சம் அதிக ஓசை எழும் படியாகவே இழுத்து அடைத்தார் கமலக்கண்ணன். கார் புறப்பட்டது. வீடு திரும்பியதும் மனைவி அவரிடம் பேச வந்தாள்.

“சனியனைக் கைகழுவியாச்சா இல்லையா?”

“கைகழுவியாச்சு. ராத்திரி சாப்பாட்டுக்குப் பாய்சம் வேணா வையி...”

“நிம்மதியா இன்னிக்கி ராத்திரி ஒரு சினிமாவுக்குப் போகலாம் வரீங்களா...”

“அவசியம் வரேன். என்ன படம்?”

“லவ்வர்ஸ் இன் ஹொனலூலூ...”

“போகலாம்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/188&oldid=1049513" இலிருந்து மீள்விக்கப்பட்டது