பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

நெஞ்சக்கனல்


“என்னங்க இந்த வாரத்திலே ஒருநாள் மாயா வீட்டிலே தலையைக் காட்டிட்டு வரச் செளகரியப்படுமா?.” என்று சமயமறிந்து அடுத்த வலையையும் விரித்தார் பிரகாசம்.

“யோசிச்சுச் சொல்றேன். இந்த வாரம் ‘சாமிகள்’ நம்ம வீட்டுக்கு வாராரு பாத பூஜை எல்லாம் இருக்கு, ஏதோ என் சம்சாரத்துக்கு இதிலே கொஞ்சம் கிறுக்கு...” என்று மனைவியின் தலையில் பக்திப் பழியைப் போட்டார் கமலக்கண்ணன்.

“ஆமாங்க! இந்த ‘சாமி’யைப் பத்தி எல்லாருமே நல்லபடியாச் சொல்றாங்க...இவர் சொன்னது அப்படியே பலிக்குதாம்...” என்று உடன் ஒத்துப் பாடினார் பிரகாசம். பெரிய மனிதர்களிடம் பழகி வெல்வதற்கு அது சரித்துப் பேசுவதும் ஒரு சாதனம் என்று கருதியவராகத் தோன்றினார் அவர்.”

“டெய்லி நடத்தப் போறதைச் சாமிகிட்டேயே சொல்லி ஆசீர்வாதம் வாங்கிடலாம்”– என்று கலைச்செழியனும் இழைந்து பேசிச் சமாளித்தான்.

“இந்தச் சாமி எதை வாழ்த்தினாலும் அது பொன்னாக் கொழிக்குதுங்கிறாங்க...” என்றார் பிரகாசம்.

“சாமி வரன்னிக்கு எல்லாப் போட்டோவும் நீங்க தான் எடுக்கணும்...” என்று கலைச்செழியனிடம் கூறினார் கமலக்கண்ணன்,

“ஆகா! நீங்க சொல்லணுங்களா? உங்க ஆஸ்தான போட்டோகிராபர உத்தரவே வாங்கிக்கிட்டப்புறம்?”... என்று கலைச்செழியன் வாயெல்லாம் பல்லாகத் தெரிய இளித்து அதை அங்கீகரித்தான்.

உடனே ஒரு இருபது முப்பது நண்பர்களுக்கும், பிரமுகர்களுக்கும் போன்செய்து மடாதிபதி வரப்போகிற செய்தியைத் தெரிவித்தார் கமலக்கண்ணன் ஒருவார்த்தை கூட வித்தியாசமில்லாமல் ஒரே செய்தியை இருபது பேருக்கு கிராமபோன் பிளேட்மாதிரி கூறியதில் அவருக்கு அலுப்போ, சலிப்போ சிறிதும் ஏற்பட்டதாகவே தெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/86&oldid=1047798" இலிருந்து மீள்விக்கப்பட்டது